ரூ.8500-க்கும் மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான தருணமா.. இன்றைய விலை நிலவரம் என்ன.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த வார தொடர்ச்சியான சரிவுக்கு பிறகு இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

இது பெரியளவில் ஏற்றத்தினை காணவிட்டாலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து, 8,500 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது.

பிட்காயின் விலையில் தடாலடி உயர்வு.. என்ன காரணம்..? மீண்டும் முதலீடு செய்யலாமா..?!பிட்காயின் விலையில் தடாலடி உயர்வு.. என்ன காரணம்..? மீண்டும் முதலீடு செய்யலாமா..?!

ஆக இது தங்க வர்த்தகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

சரிவு தொடருமா?

சரிவு தொடருமா?

எனினும் இந்த சரிவு இப்படியே தொடருமா? இனியும் குறையுமா? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன, முக்கிய லெவல்கள் என்னென்ன? சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இன்று பெரியளவில் மாற்றமில்லை

இன்று பெரியளவில் மாற்றமில்லை

தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், பெரியளவில் ஏற்றம் காணப்படவில்லை. எப்படியிருப்பினும் தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு மேலேயே காணப்படுகிறது. இது உடைத்து இன்னும் கீழாக தொடருமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

உச்சத்தில் இருந்து ரூ.8,500-க்கு மேல் சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.8,500-க்கு மேல் சரிவு

இன்று தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து 8,500 ரூபாய்க்கும் மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதில் கவனம்

இதில் கவனம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க நினைப்பவர்கள் நடப்பு ஆகஸ்ட் கான்ட்ராக்ட், ஆக்ஸ்ட் 5 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த கான்ட்ராக்டில் வாங்கி வைக்கலாம். ஒன்று நடப்பு கான்ட்ராக்டில் நீண்டகால நோக்கில் வாங்கி வைத்திருப்பவர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம். அல்லது ரோல் ஓவர் செய்யலாம். இதனால் சந்தையானது மேற்கொண்டு சரிவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா குறித்த அச்சம்

கொரோனா குறித்த அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இன்னும் சில தினங்களில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்காக அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பாதுகாப்பு புகலிடமாக தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

கடந்த சில தினங்களாகவே அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் காணப்பட்டதையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்பட்டன. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இது தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் காண வாய்ப்பாக அமைந்தது. எனினும் இன்று பங்கு சந்தைகள் ஏற்றத்தில் காணப்படும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

நடப்பு வாரத்தில் இன்று பெரிய டேட்டாக்கள் எதுவும் இல்லை. எனினும் செவ்வாய்கிழமை அமெரிக்காவின் நுகர்வோர் நம்பிக்கை குறித்தான டேட்டாவும், புதன் கிழமையன்று நுகர்வோர் விலைக் குறியீடு, பெடரல் வங்கி கூட்டம், வியாழக்கிழமையன்று ஃபெடரல் வங்கியின் கூட்டம், அட்வான்ஸ் ஜிடிபி, வெள்ளிக்கிழமையன்று ஜிடிபி டேட்டாவும், முக்கிய pce டேட்டாவும் வெளியாகவுள்ளது. ஆக இது சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பதால், முதலீட்டாளர்கள் இதில் கவனம் செலுத்துவது நல்லது.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம், அமெரிக்க பத்திர லாபம், உருமாறிய கொரோனா பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய காரணிகளாக உள்ளன. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் - 47,316, 47,098, 46,678 ரூபாயாகும்

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் -. 47,736, 47,938, 48,358 ரூபாயாகும்.

வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் - 66,607, 66,190, 65,297 ரூபாயாகும்
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் -. 67,500, 67,967, 68,869 ரூபாயாகும்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.05 டாலர்கள் அதிகரித்து, 1806.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. ஆக இன்று மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.73% அதிகரித்து, 25.418 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது, தற்போது 10 கிராமுக்கு 153 ரூபாய் அதிகரித்து, 47,697 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைப்பது போலத் தான் காணப்படுகின்றது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 393 ரூபாய் அதிகரித்து, 67,417 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 14 ரூபாய் அதிகரித்து, 4,520 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 36,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 15 ரூபாய் அதிகரித்து, 4,931 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 39,448 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 72.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 72,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் என்பது நீண்டகால நோக்கில் தேவையானது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம். நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்க நல்ல வாய்ப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on july 26th, 2021; gold price trade above Rs.47,600 per 10 gram, but Rs.8,500 above down from august high

Gold price latest updates.. Gold and silver prices rises today in MCX and COMEX, jewellery gold also up today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X