தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் காலையில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், மீண்டும் மாலையில் ஏற்றத்தினைக் கண்டது. இன்றும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,600 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் கானப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? இனி அதிகரிக்குமா? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன என பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஏற்றத்திற்கு என்ன காரணம்

ஏற்றத்திற்கு என்ன காரணம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டமானது இன்று தொடங்கவுள்ள நிலையில், இதில் பொருளாதாரத்தினை மேம்படுத்த முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

உச்சத்தில் இருந்து குறைவு தான்

உச்சத்தில் இருந்து குறைவு தான்

இன்று தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொட்ட வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

உருமாறிய கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா பரவல்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.

பாதுகாப்பு புகலிடத்தில் கவனம்

பாதுகாப்பு புகலிடத்தில் கவனம்


அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது எனலாம். எப்படியிருப்பினும் தங்கம் விலையில் இரண்டு நாட்களுக்கு ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், முந்தைய அமர்வில் அதற்கு கீழாகத் தான் முடிவடைந்துள்ளது. இன்று தொடக்கத்திலும் 1800 டாலர்களுக்கு கீழாக தொடங்கியிருந்தாலும், முந்தைய அமர்வின் உச்ச விலையானது 1805.40 டாலர்களை உடைத்தும் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

கவனம் செலுத்துங்கள்

கவனம் செலுத்துங்கள்

நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 4.25 டாலர்கள் அதிகரித்து, 1803.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ள நிலையில், முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.71% அதிகரித்து, 24.825 டாலர்களாக காணப்படுகிறது. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 67 ரூபாய் அதிகரித்து, 47,640 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 293 ரூபாய் அதிகரித்து, 66,349 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்பது போல காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 16 ரூபாய் அதிகரித்து, 4,520 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 36,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 17 ரூபாய் அதிகரித்து, 4,931 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 39,448 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து வருகின்றது. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 71.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 71,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+