நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமோ.. உச்சத்தில் தங்கம் விலை.. இனி எப்போது குறையும்..!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் காலையில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், மாலையில் மீண்டும் மாற்றமில்லாமல் முடிந்தது.

இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,400 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஏற்றத்திற்கு என்ன காரணம்

ஏற்றத்திற்கு என்ன காரணம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டத்தில், வட்டி விகிதமானது தற்போதைக்கு மாற்றம் செய்யப்படாது என்ற நிலையே இருந்து வருகின்றது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது பொருளாதாரம் இன்னும் மீண்டு வரவில்லை. இன்னும் வேலை வாய்ப்பு சந்தையில் இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரிவினை மீட்க இன்னும் சிறிது காலம் ஆகலாம். இதனால் டாலரின் மதிப்பானது இரண்டு வார குறைந்த மதிப்பில் காணப்படுகிறது.

உச்சத்தில் இருந்து குறைவு தான்

உச்சத்தில் இருந்து குறைவு தான்

இன்று தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு கிட்டதட்ட 1000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொட்ட வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,400 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 வார சரிவினைக் எட்டியுள்ள நிலையில், இது மற்ற நாணயதாரர்களுக்கு குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் தங்கமானது விலை அதிகரித்துள்ளது. அதோடு தற்போதைக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என்ற நிலையில், சிறந்த பாதுகாப்பு புகலிடமாகவும் உள்ளது.

சிறந்த ஹெட்ஜிங் ஆப்சன்

சிறந்த ஹெட்ஜிங் ஆப்சன்

டாலரின் மதிப்பு அழுத்தத்தில் உள்ள நிலையில், வட்டி விகிதம் குறைவாகவே இன்னும் சிறிது காலத்திற்கு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உருமாறிய கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது பற்பல நாடுகளிலும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சர்வதேச பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.

டெக்னிக்கல் லெவல்

டெக்னிக்கல் லெவல்

தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்டு வந்த, இன்று தொடக்கத்திலும் 1800 டாலர்களுக்கு மேலாக தொடங்கியுள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதனால் தங்கம் விலையானது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 15.45 டாலர்கள் அதிகரித்து, 1815.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ள நிலையில், முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 1.92% அதிகரித்து, 25.355 டாலர்களாக காணப்படுகிறது. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 363 ரூபாய் அதிகரித்து, 47,940 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 1023 ரூபாய் அதிகரித்து, 67,413 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்பது போல காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 9 ரூபாய் அதிகரித்து, 4,530 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 36,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 10 ரூபாய் அதிகரித்து, 4,942 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 39,536 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், ஆபரண வெள்ளி விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 72.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 72,200 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். இதுவே பேப்பர் தங்கத்தினையும் நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+