சற்றே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. இது இன்னும் எவ்வளவு குறையும்? என பல கேள்விகள் எழுந்துள்ளது. எனினும் இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,000 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் கானப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..!இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..!

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 4.10 டாலர்கள் குறைந்து, 1827.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.50% குறைந்து, 25.650 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 101 ரூபாய் குறைந்து, 48,180 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையையும், இன்று அதே விலையில் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் தற்போதைக்கு குறைந்திருந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 218 ரூபாய் குறைந்து, 67,975 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்பது போல காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 32 ரூபாய் அதிகரித்து, 4,562 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து, 36,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 35 ரூபாய் அதிகரித்து, 4,977 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 39,816 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே, ஆபரண வெள்ளி விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு, 72.21 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 72,210 ரூபாயாகவும் காணப்படுகிறது. நேற்று வெள்ளி விலையானது சற்று அதிகரித்திருந்த நிலையில், இன்றும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

அதிகரித்து வரும் தேவை

அதிகரித்து வரும் தேவை

இந்தியாவில் தற்போது லாக்டவுனில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்திற்கான தேவையானது ஜூன் காலாண்டில் 19.2% அதிகரித்துள்ளது. கொரோனாவினால் முடங்கியிருந்த தேவையானது தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இது கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விலையும் மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவுக்கு என்ன காரணம்

சரிவுக்கு என்ன காரணம்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி பொருளாதாரத்திற்கு ஆதரவு கொடுத்து வரும், வட்டி விகிதங்களில் மீடியம் டெர்மில் மாற்றம் இருக்காது என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் தங்கம் விலையானது கடந்த அமர்வில் மிகப்பெரிய ஏற்றத்தினை கண்டது. இதனால் பொருளாதாரம் விரைவில் மீண்டு வர வழிவகுக்கும். மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எப்படியிருப்பினும் தற்போதைக்கு வட்டி விகிதம் குறைவாகவே உள்ள நிலையில் அது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக உள்ளது.

எந்த மாற்றமும் இல்லை

எந்த மாற்றமும் இல்லை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது அமெரிக்க ஃபெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டமானது முடிவடைந்துள்ள நிலையில், எதிர்பார்த்த அளவு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

உச்சத்தில் இருந்து குறைவு

உச்சத்தில் இருந்து குறைவு

இன்று தங்கம் விலையானது பெரியளவில் சரிவினை காணாவிட்டாலும், சற்று சரிவில் காணப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொட்ட வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

உருமாறிய கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் முதலீட்டு தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இது தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.

பாதுகாப்பு புகலிடத்தில் கவனம்

பாதுகாப்பு புகலிடத்தில் கவனம்

அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது எனலாம்.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on july 30th, 2021; gold price little down today, silver also down today

Gold price latest updates.. Gold price today on july 30th, 2021; gold prices down today, silver also down
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X