தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த நிலையில், கடந்த அமர்வில் (மாலை அமர்வில்) மீண்டும் சரிவினையே கண்டது. இது பெரியளவில் சரிவினைக் காணா விட்டாலும், சற்று சரிவில் காணப்பட்டது.
இது கடந்த ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும்போது 9,300 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகின்றது.
எனினும் இன்னும் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கருத்து என்ன? வாங்கலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்னென்ன? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இது குறையுமா? எவ்வளவு குறையும்? கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச காரணிகள்
தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறினாலும், கடந்த அமர்வில் சற்று சரிவினைக் கண்டது. எனினும் இன்றும் நாளையும் சந்தைகள் விடுமுறையாதலால், திங்கட்கிழமையன்று எப்படியிருக்கும். டாலரின் மதிப்பு கடந்த அமர்வில் வலுவடைந்ததையடுத்து மீண்டும் சரிவினைக் கண்டது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.
சரியான சான்ஸ்
இது தங்க வர்த்தகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,300 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் கானப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் குறித்த அச்சம்
எனினும் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஊக்குவிப்பு தொகைகளுக்கு வழிவகுக்கலாம். வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருக்கவும் மத்திய வங்கிகளை தூண்டலாம் என்பதால், இவை அனைத்துமே தங்கத்திற்கு சாதகமான காரணிகளாக பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.
அதிகரிக்கும் பத்திர லாபம்
கடந்த சில தினங்களாகவே மீண்டும் ஏற்றப் பாதையினை நோக்கி சென்று கொண்டுள்ள பத்திர லாபமானது, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் வட்டியில்லா முதலீடான தங்கம் விலை குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கவனம் செலுத்துங்கள்
நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய காரணங்களுக்கும் மத்தியில், தங்கம் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.
முக்கிய லெவல் உடைப்பு
தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களை உடைத்து கீழாக தங்கம் விலையானது, அவுன்ஸூக்கு 11.45 டாலர்கள் குறைந்து 1788.55 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 1770 டாலர்களை கணித்துள்ளனர். இதனால் மீடியம் டெர்மில் செல்லிங் பிரஷர் அதிகமாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெதுவான பொருளாதார வளர்ச்சி
உருமாறிய டெல்டா கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மெதுவான வேகத்தில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. ஆக மத்திய வங்கி கூட்டத்தில் பத்திர கொள்முதல் பற்றிய பேச்சு வார்த்தை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தடுப்பூசி விகிதம் என்பதும் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய சவால்
பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள அதே நேரத்தில், வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது. இது பணவீக்கத்திற்கு உந்துதலாக அமையலாம். இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கத்தின் விலை அதிகரிக்கலாம். ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
Array
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது முடிவில் 11.45 டாலர்கள் குறைந்து, 1788.55 டாலர்களாக முடிவுற்றுள்ளது. இதே வெள்ளி விலையானது 1.72% குறைந்து, 23.762 டாலர்களாக முடிவுற்றுள்ளது.
இதே எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 186 ரூபாய் குறைந்து, 46.808 ரூபாயாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு 559 ரூபாய் குறைந்து, 63,559 ரூபாயாகவும் சரிவினைக் கண்டு முடிவுற்றுள்ளது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 11 ரூபாய் குறைந்து, 4,440 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 35,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 12 ரூபாய் குறைந்து, 4,844 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 38,752 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே 10 கிராமுக்கு 48,440 ரூபாயாகவும் காணப்படுகிறது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையும் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 0.10 பைசா அதிகரித்து, 68.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 68,600 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையும் தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.
மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். இதுவே முதலீட்டு நோக்கிலும் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications