தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

தங்கம் விலையானது தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது.

அதோடு கடந்த ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும்போது 10,200 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் இன்று இன்னும் விலை குறையுமா? அதிகரிக்குமா? முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கருத்து என்ன? வாங்கலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்னென்ன? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.

வலுவான டாலர் Vs தங்கம்

வலுவான டாலர் Vs தங்கம்

தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பு, சற்று வலுவடைந்து காணப்படும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. அதன் எதிரொலியாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் மேலும் சரிவினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இது தங்க வர்த்தகர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,200 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

உருமாறிய கொரோனா குறித்த அச்சம்

உருமாறிய கொரோனா குறித்த அச்சம்

அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக தற்போது இதன் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், இது மூன்றாவது அலையாக இருக்குமோ என்ற அச்சமும் எழுந்து வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் குறித்த அச்சமும் இருந்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடப்பு வாரத்தில் நடக்கவிருக்கும் FOMC கூட்டத்தில், பத்திரம் வாங்குதல் குறைத்தல், வட்டி விகிதம், ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் ஏதும் வருமோ என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

கடந்த சில தினங்களாகவே மீண்டும் ஏற்றப் பாதையினை நோக்கி சென்று கொண்டுள்ள பத்திர லாபமானது, இன்னும் தங்கம் விலைக்கு எதிராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் அடுத்த முக்கிய லெவல் அவுன்ஸூக்கு 1740 டாலராகும். இதனை உடைத்தால் தங்கம் விலையானது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாலரின் மதிப்பும் உச்சத்தில் உள்ள நிலையில், டாலரில் தங்கத்தில் முதலீடு செய்யும் மற்ற நாட்டு முதலீட்டாளர்களுக்கு, இது விலை அதிகமானதாக இருக்கும் என்பதால் இது முதலீட்டினை குறைக்க வழிவகுக்கும். மொத்தத்தில் இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம்.

கொஞ்சம் பொறுங்காள்

கொஞ்சம் பொறுங்காள்

அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம், உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா உள்ளிட்ட பல முக்கிய காரணங்களுக்கும் மத்தியில், தங்கம் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1751.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. மேலும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.330 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் முந்தைய அமர்வினை விட சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 61 ரூபாய் குறைந்து, 45,925 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 228 ரூபாய் குறைந்து, 59,751 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 16 ரூபாய் குறைந்து, 4,355 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 34,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் குறைந்து, 4,751 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 38,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே 10 கிராமுக்கு 47,510 ரூபாயாகவும் காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையும் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 0.70 பைசா குறைந்து, 63.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 63,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையும் தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். இதுவே முதலீட்டு நோக்கிலும் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் பொறுத்திருந்து வாங்கும்பட்சத்தில் லாபம் இன்னும் அதிகமாக கிடைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+