ரூ.9000 சரிவில் தங்கம் விலை.. இன்று வாங்கலாமா.. வேண்டாமா.. இன்னும் குறையுமா...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக சற்று ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

அதிலும் தற்போது இந்தியாவில் பற்பல தளர்வுகளுக்கு மத்தியில் தங்கத்திற்கான தேவை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கத்திற்கான அடிப்படை இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளது.

 முதல் நாளே க்ரீன் சிக்னல் காட்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..! முதல் நாளே க்ரீன் சிக்னல் காட்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

இந்தியாவில் இதுவரையில் பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில், தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆக கடந்த சில மாதங்களாகவே தடை செய்யப்பட்ட விழாக்களும், இனி வரும் மாதங்களில் மீண்டும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம்.

தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம்.

அதோடு இதற்கு முன்னதாகவும் மக்கள் வாங்க வேண்டும் என்றாலும், நகைக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது பற்பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இது மக்களின் கையில் பணப்புழக்கத்தினையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

அமெரிக்காவின் பங்கு சந்தையானது தொடர்ந்து கடந்த 7 அமர்வுகளாகவே ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் காணப்படுகிறது. அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான டேட்டாவும் ஜூன் மாதத்தில் எதிர்பார்ப்பினை விட அதிகரித்துள்ள நிலையில், இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டியினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

சமீபத்திய நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்று அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவாகவே காணப்படுகின்றது. இது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் இருந்து ரூ.9000 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.9000 சரிவு

தங்கம் விலையானது கடந்த ஆண்டில் வரலாற்று உச்சமான 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதன் பின்னர் பெரியளவில் மாற்றமின்றி சரிவிலேயே காணப்படுகிறது. இது தற்போது வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு சுமார் 9000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரம் என்றாலும், தற்போதைக்கு காரணிகள் தங்கத்திற்கு பெரியளவில் சாதகமாக இல்லை எனலாம்.

தங்கம் விலையில் அழுத்தம்

தங்கம் விலையில் அழுத்தம்

தங்கத்தின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,600 ரூபாயாகவும், சப்போர்ட் லெவல் 46650 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர் . இதற்கிடையில் தற்போது வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பானது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம் விலையானது தற்போது பெரியளவில் ஏற்றம் காணவில்லை.

கணிப்பு இதுதான்

கணிப்பு இதுதான்

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி, ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. இது 1745 - 1800 டாலர்களுக்காகவே காணப்படுகிறது. ஆக இந்த விலையினில் ஏதேனும் விலையை உடைத்தால் சந்தையில் ஒரு மாற்றம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.80 டாலர்கள் அதிகரித்து, 1786.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது..

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. மீடியம் வர்த்தகர்கள் வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 26.630 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 47,290 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும்போது சுமார் 9,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 466 ரூபாய் அதிகரித்து, 69,584 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது 11 ரூபாய் குறைந்து, 4,475 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 35,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 12 ரூபாய் குறைந்து, 4,882 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 39,056 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 75 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 75,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் வெள்ளி விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்பட்டாலும், பல காரணிகளும் தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளன. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். எனினும் குறையும்போது வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today remain weak, down down Rs.9000 per 10 gram from record high

Gold price today updates.. Gold price today remain weak, down down Rs.9000 per 10 gram from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X