பெரும் சரிவுக்கு பிறகு தடுமாற்றத்தில் தங்கம் விலை.. இன்று குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

 

இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. கடந்த இரு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
இது டெக்னிக்கலாக பார்க்கும்போது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

பணவீக்கம் குறித்த டேட்டா

பணவீக்கம் குறித்த டேட்டா

பணவீக்கம் குறித்தான டேட்டா இன்று வெளியாகவிருக்கும் நிலையில், இது தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அது வரையில் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிரொலி ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையின்மை நலன் தரவு

வேலையின்மை நலன் தரவு

அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் வேலையின்மை நலன் குறித்தான தரவு, 52 வாரத்தில் இல்லாதளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து சந்தையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படும் நிலையில், இதுவும் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்
 

பணவீக்கம் குறித்த அச்சம்

தொடர்ந்து வட்டி விகிதம் குறைவாக உள்ள நிலையில், பணவீக்கம் குறித்தான அச்சம் நிலவி வருகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற யூகத்திற்கு மத்தியில் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. ஆக இதனால் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவல் இருந்து வருகின்றது. இதனால் பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. எனினும் முதல் மற்றும் இரண்டாம் அலை போல இது கடுமையாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுவது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து முழுமையாக அறிய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். அப்போது தான் முழுமையாக தெரிய வரும்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து 1777.95 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது. ஆக இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையும் தற்போது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 21.997 டாலர்களாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வினை காட்டிலும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. எனினும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தற்போது சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, 47,984 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வினை காட்டிலும் சற்று மேலாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 61 ரூபாய் குறைந்து, 60,737 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையானது இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது கிராமுக்கு 4,514 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 36,112 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையின் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 4904 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 39,232 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் இது தேவையிருக்கும்பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 64.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 648 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 64,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையிருக்கும்பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் இன்று சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today struggling after big fall ahead of inflation data

Gold price today struggling after big fall ahead of inflation data/பெரும் சரிவுக்கு பிறகு தடுமாற்றத்தில் தங்கம் விலை.. இன்று குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X