Gold:தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் அவுன்ஸூக்கு 1900 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது.
அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் பேச்சுக்கு பின்னதாக, இனி வட்டி அதிகரிப்பு இருக்குமா? என்ற சந்தேகமானது வலுத்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது.
இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே உச்சத்தில் காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கம் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் விலையானது குறையவே குறையாதா? அடுத்த என்ன செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டாலரின் மதிப்பு
தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது 0.9% அளவுக்கு சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக காணப்படுகின்றது. எனினும் இனி வரவிருக்கும் நாட்களில் டாலரின் மதிப்பானது எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முக்கிய லெவல்
தங்கத்தின் உடனடி சப்போர்ட் ஆனது 10 கிராமுக்கு 56,800 ரூபாய் மற்றும் 56,400 ரூபாயாக கமாடிட்டி நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1860 டாலர்களாகவும் கணித்துள்ளனர். இதனை உடைக்கும்பட்சத்தில் 1835 டாலராகவும் காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் சமீபத்திய நாட்களாகவே தங்கம் விலையானது 1890 - 1920 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.55 டாலர்கள் அதிகரித்து, 1891.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 1.07% அதிகரித்து, 22.415 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 8 ரூபாய் அதிகரித்து, 57,265 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 67,729 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5383 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 43,064 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 5872 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 58,720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது இன்றும் கிராமுக்கு விலை மாற்றம் செய்யப்படாமல், 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் தடுமாற்றம்.. இப்போ முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..



Click it and Unblock the Notifications