தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணி இது தான்.. இனி விலை எப்படியிருக்கும்.. குறையுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் போகிற போக்கில் உச்சத்தினை மீண்டும் தொட்டு விடுமோ? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? கடந்த ஆண்டு உச்சத்தினை தொடுமா? நிபுணர்களின் கருத்து என்ன? அடுத்து என்ன நடக்கும்.

ஒரு புறம் தங்கம் விலை சரிவதற்கு சாதகமான காரணிகள் பலவும் இருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையானது பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் மூன்றாவது அலை என்பது ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொடலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

ஆக ஏற்கனவே முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினால் முடங்கிய பொருளாதாரமே மீண்டு வராமல் கேள்விக்குறியாக உள்ள நிலையில், மூன்றாவது அலை என்ன செய்யப்போகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் பல மதிப்பீட்டு நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை குறைத்து வருகின்றன. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீடு குறித்த அச்சமும் எழுந்துள்ளது.

மூன்றாம் அலையின் தாக்கம்

மூன்றாம் அலையின் தாக்கம்

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவில் இருந்து, தடுப்பூசி மக்களை காப்பாற்ற எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், மறுபுறம் பல கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது தற்போதைக்கு நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தேவை எப்படியிருக்கும்?

தேவை எப்படியிருக்கும்?

எப்படியிருப்பினும் தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

rangeboundல் தங்கம் விலை

rangeboundல் தங்கம் விலை

முன்னதாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் எல்லா ரெசிஸ்டன்ஸ் லெவல்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. குறிப்பாக நிபுணர்களின் கணிப்பினை போல 1800 டாலர்களையும் உடைத்து, கடந்த வெள்ளிக்கிழமை அமர்வில் முடிவு விலையும் அதற்கு மேலாகவே முடிந்துள்ளது. ஆக இனி அடுத்தடுத்து வரும் அமர்வுகளில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் வங்கியின் முக்கிய பங்கு வகிக்கலாம்

ஃபெடரல் வங்கியின் முக்கிய பங்கு வகிக்கலாம்

மேற்கண்ட சில காரணிகளை விட அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் பாலிசி கூட்டமானது, வரும் வாரங்களில் தங்கம் விலையில் முக்கிய பங்கினை வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் இறுதியில் மிகப்பெரிய ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் சற்று சரிவினைக் கண்டும், ரோலர் கோஸ்டர் போல உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டின் பிற்பாதியில் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்பார்ப்பு

முக்கிய எதிர்பார்ப்பு

அமெரிக்க ஃபெடரல் வங்கியானது முன்னதாக 2023 வரையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது இதற்கு முன்னதாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என்றும், அதுவும் இரு முறை ஏற்றம் இருக்கலாம் என்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஆக அமெரிக்க மத்திய வங்கியானது விரைவில் அதன் பாலிசியினை இறுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் சற்று குறைவது போன்று தோன்றினாலும், தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1786.50. டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1784.75 டாலர்காள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1819.50 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1808.55 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்திலும் அதிகரிக்கலாம் என்பது போலவே இருப்பதால், நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையானது ஏற்றம் கண்டாலும், வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சரிவினையே கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 26.698 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 26.910 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.820 டாலர்களை தொட்டது. முடிவில் 26.188 டாலர்களையும் தொட்டது. வெள்ளியின் விலை நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,349 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே 47,250 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 48,290 ரூபாயினை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 47,923 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 70,445 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 70,960 ரூபாயாகவே இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 68,425 ரூபாயினை தொட்டு, முடிவில் 69,297 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 8400 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. எனினும் பெரிய மாற்றம் என்பது இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,784 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,526 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,208 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,300 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் இது பெரியளவில் குறையுமா? என்ற சந்தேகத்தினையே நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. மூன்று நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,380 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 74.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 741 ரூபாயாகவும், கிலோவுக்கு 74,100 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 75,000 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 74,100 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தற்போதைக்கு மீடியம் டெர்மில் பிசிகல் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் திருமண முகூர்த்தம், விழாக்கள் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல் பேப்பர் தங்கத்தினையும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

டாலர் நிலவரம்

டாலர் நிலவரம்

அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற யூகத்திற்கு மத்தியில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விகிதம், பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் என அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இதனால் டாலரின் மதிப்பானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் சில யூகங்கள் தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் கூறி வருகின்றன.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

ஆக ஃபெடரல் வங்கியின் இந்த அறிவிப்பானது தங்கத்தின் விலையினை முக்கிய தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஒரு விதத்தில் இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாகவே அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங்கும் தங்கம் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தினை நோக்கி நகரவே இது வழிவகுக்கும்.

உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ்

உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ்

பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தாக்கமானது வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today; US federal monetary policy to give direction to gold; Gold rate prediction for Next week

Gold weekly updates.. Gold price today; US federal monetary policy to give direction to gold; Gold rate prediction for Next week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X