தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா.. இன்று விலை எப்படியிருக்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே உச்சம் தொட்டு வந்தாலும், கடந்த வார இறுதியில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது 1900 டாலர்களையும் உடைத்து காட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலையானது 1900 உடைக்காமலேயே வர்த்தகமாகி வந்த நிலையில், இது இனி குறைய பெரிதும் வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டாலரின் மதிப்பானது வலுவடைந்த நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையானது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து 4 வார குறைந்தபட்ச விலையினை எட்டியது. இது மேற்கொண்டு சரியுமா? அல்லது இப்படியே சரியுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா? இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?

4 வார சரிவில் தங்கம்

4 வார சரிவில் தங்கம்

தங்கம் விலையானது வேலை தரவானது சந்தைக்கு எதிராக வந்த நிலையில், இது மத்திய வங்கியினை மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என்ற எதிர்பார்ப்பினை அதிகரித்தது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைக்க தூண்டியது. இதன் காரணமாகத் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

டெக்னிக்கல் என்ன சொல்லுது?

டெக்னிக்கல் என்ன சொல்லுது?

தற்போது தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், டெக்னிக்கலாக தங்கத்தில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக மேற்கொண்டு தங்கம் விலையானது அதிகரித்தாலும், அது குறைந்து பின்னர் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

டாலரின் நிலை?

டாலரின் நிலை?

தற்போது டாலர் மதிப்பானது 0.2% அதிகரித்து காணப்படுகின்றது. இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். அதோடு தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற சூழலே இருந்து வருகின்றது. ஆக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க இது வழிவகுக்கலாம்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆக இது மேற்கொண்டு விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். மேலும் பட்ஜெட் 2023லும் வரி விகிதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இதுவும் தங்கம் விலையானது அதிகரிக்க வழிவகுக்கலாம். குறிப்பாக இந்தியாவில் திருமண பருவம் வரவுள்ள நிலையில். இது தேவையினை ஊக்குவிக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 11.65 டாலர்கள் அதிகரித்து, 1888.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.25% அதிகரித்து, 22.462 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது (ஏப்ரல் கான்ட்ராக்ட்) 10 கிராமுக்கு, 349 ரூபாய் அதிகரித்து, 56,934 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 127 ரூபாய் அதிகரித்து, 67,703 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 5365 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 42,920 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 5853 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 330 ரூபாய் அதிகரித்து, 58,530 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price touch over 4 week low amid dollar edges higher: is it a right time to buy?

Gold prices surges by Rs.240 per 8 grams: is it a right time to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X