வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை! 50,000-ஐத் தொடுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பணக்காரன், ஏழை, நடுத்தர மக்கள், சம்பளதாரர்கள், கூலித் தொழிலாளிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்தமான விஷயம் தங்கம்.

அந்த அளவுக்கு இந்திய சமூகத்தில் தங்கத்துக்கு என்று ஒரு தனி அந்தஸ்தும், மதிப்பும் இருக்கிறது.

அப்படி, இந்திய மக்களின் நாடி நரம்புகளில் எல்லாம் ஒன்றாகி கலந்து ஓடும் தங்கத்தின் விலைம, ஏனோ வரலாற்று உச்சத்தைத் தொட்டுக் கொண்டே இருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

கொரோனா ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,650 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலத்தில் மே 28 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 48,090 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் இப்போது 1,560 ரூபாய் விலை அதிகரித்து விற்பனை ஆகிறது. பவுனுக்கு 1,248 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை 22 கேரட்

சென்னையில் தங்கம் விலை 22 கேரட்

22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மே 28 அன்று இதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 44,310 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 1,210 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. பவுனுக்கு 968 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.

வரலாற்று உச்சம்

வரலாற்று உச்சம்

இப்படி 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் 49,650 ரூபாயைத் தொடுவது, 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 45,520 ரூபாயைத் தொடுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் அடுத்த சில நாட்களில் 24 கேரட் 10 கிராம் தங்கம் 50,000 ரூபாயைத் தொட்டுவிடும். சரி சர்வதேச அளவில் தங்கம் விலை நிலவரம் என்ன? ஏன் தங்கம் விலை ஏற்றம் காண்கிறது? வாருங்கள் பார்ப்போம்.

சர்வதேச தங்கம்

சர்வதேச தங்கம்

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தன் வட்டி விகிதங்களில் பெரிய மாற்றம் கொண்டு வரப் போவதில்லை எனச் சொன்னது, சீனாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வந்திருப்பதாக வெளியான செய்தி போன்றவைகளும், தங்கத்தின் விலையை கடந்த ஒரு வார காலத்தில் பிரமாதமாக ஏற்றம் காண வைத்திருக்கின்றன.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

கடந்த ஒரு மாத காலத்தில், தங்கம் 05 ஜூன் 2020 அன்று 1,685 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. அதன் பின் 10 ஜூன் அன்று 1,738 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று கூட தங்கம் விலை 1,743 டாலரைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. ஆக தங்கம் விலை கடந்த ஒரு வார காலத்தில் நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறது.

அமெரிக்க டாலர் தலைவலி

அமெரிக்க டாலர் தலைவலி

இது போக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேறு, மீண்டும் தன் ஒரு மாத கால உச்ச விலையான 75.95 ரூபாயை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. நேற்று ஒரு டாலர் = 75.84 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்தியாவில் தங்கம் விலை ஏற்றத்துக்கு டாலரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதெப்படி அமெரிக்க டாலரால் நமக்கு தங்கம் விலை உயரும் என்கிற கேள்விக்கு "அமெரிக்க டாலரால் விலை உயரும் தங்கம்..!" என்கிற தலைப்பில் விளக்கமாக பதில் கொடுத்து இருக்கிறோம். படித்துப் பார்க்கவும்.

மேலும் விலை ஏறலாம்

மேலும் விலை ஏறலாம்

பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிப்பது, அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவது போன்ற காரணங்களால், இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கலாம். எனவே தங்கம் அடுத்த சில வாரங்களில் 50,000 தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price touched its historical high 13 june 2020

Gold price now touched its historical high. Gold price may touch Rs. 50,000 in the next few weeks due to coronavirus second wave news and strengthening dollar value.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X