பாவம் சாமானியர்கள்! மீண்டும் வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம். இந்த சொல்லோடு ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு இருக்கும். சிலர் தங்க நகைகளை அதிகம் வாங்கி இருப்பார்கள். சிலர் தங்க நகைகளை விற்று இருப்பார்கள். சிலர் தங்க நகைகளை அடகு வைத்து இருப்பார்கள்.

 

சிலர் தங்க நகைகளை வாங்கலாமா என யோசித்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி தங்கத்துக்கும், நம் இந்தியர்களுக்குமான உறவு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் தங்கத்தின் விலையும், சாமானியர்களை விட்டு வெகு தொலைவுக்குப் போய்க் கொண்டே இருக்கிறது. Gold rate என்ன? தங்கம் எதிர்காலத்தில் விலை என்ன ஆகும்? வாருங்கள் பார்ப்போம்.

குவியும் முதலீடுகள்

குவியும் முதலீடுகள்

கடந்த 2009-ம் ஆண்டு முழுக்க, தங்க இடிஎஃப் ஃபண்டில், முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்தார்களோ, அதை 2020-ம் ஆண்டில், ஜூலை மாதத்துக்குள்ளேயே முதலீடு செய்து முடித்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு தங்கத்தில் முதலீட்டாளர்கள் குவிந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் கொரோனா வைரஸ். பாதுகாப்பு கருதி, முதலீடுகள் தங்கத்தில் குவிந்து கொண்டு இருக்கின்றன.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

முந்தைய தங்கம் சார்ந்த கட்டுரைகளில், சர்வதேச தங்கம் விலை 1,785 டாலரைத் தொட்டு வர்த்தகமாகும் போதே, தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருந்தோம். அதே போல இன்று, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,813 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பெரிய நிறுவன கணிப்புகள்
 

பெரிய நிறுவன கணிப்புகள்

உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ் அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,000 டாலரைத் தொடலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதே போல ஜே பி மார்கன் என்கிற உலகின் முன்னணி நிதி நிறுவனமும் தங்கம் விலை அதிகரிக்கும் என பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. ஆக சர்வதேச தங்கம் விலை அதிகரிக்கவே நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தால், நம் ஊரில் தங்கம் விலையும் அதிகரிக்கும் என பல முறை சொல்லி இருக்கிறோம். அதன் படி தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே நம் ஊரில் ஆபரணத் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பயங்கரமாக அதிகரித்து இருக்கிறதே, இதற்கு மேலும் அதிகரிக்குமா என ஆச்சர்யப்பட வேண்டாம். சரி சென்னையில் தங்கம் விலை என்ன?

சென்னையில் 24 கேரட் தங்கம் விலை

சென்னையில் 24 கேரட் தங்கம் விலை

தமிழகத்தின் நெற்றிப் போட்டு போல் இருக்கும் சென்னையில், 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 50,990 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக கிராமுக்கு 5,099 ரூபாய் மேனிக்கு 24 கேரட் 1 பவுன் தங்கம் விலை 40792 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள்.

சென்னையில் 22 கேரட் தங்கம்

சென்னையில் 22 கேரட் தங்கம்

சிங்காரச் சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,780 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆக 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 4,678 ரூபாய் மேனிக்கு ஒரு பவுனுக்கு 37,424 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். இப்படி தங்கம் விலை ஏறிக் கொண்டே போனால், ஏழை எளிய மக்கள் எல்லாம் எப்படி தங்கத்தை வாங்குவார்கள்?

எம் சி எக்ஸ் உறுதி செய்யும் தங்கம் விலை

எம் சி எக்ஸ் உறுதி செய்யும் தங்கம் விலை

சரி சர்வதேச தங்கம் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரமாரியாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது , எனவே தங்கம் விலை அதிகரிக்கிறது. ஆனால் எம் சி எக்ஸ் இந்த விலை ஏற்றத்தை ஆதரிக்கிறதா, பிரதிபலிக்கிறதா என்றால், ஆம், வலுவாக பிரதிபலிக்கிறது.

எம் சி எக்ஸில் தங்கம் விலை

எம் சி எக்ஸில் தங்கம் விலை

கடந்த 18 மே 2020 அன்று ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட்டின் விலை 48,190 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று சுமாராக 49,300 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது தங்கம் விலை. ஆக இங்கும் தங்கம் விலை ஏற்றம் உறுதி ஆகிறது.

எதிர் காலத்தில் தங்கம் விலை

எதிர் காலத்தில் தங்கம் விலை

இப்போது மீண்டும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா மீது தகுந்த நடவடிக்கைகளை எடுப்பேன் எனச் சொல்லி இருக்கிறார். எந்த நாடும் கொரோனா வைரஸுக்காக லாக் டவுன் அறிவிக்கப் போவதாகச் சொல்லவில்லை. கொரோனா வைரசுக்கான மருந்தையும் கண்டு பிடித்ததாக தெரியவில்லை. போதாக்குறைக்கு பல முன்னனி நிதி நிறுவனங்களும் தங்கம் விலை அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆக தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே நிறைய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price touched its historical high in chennai

Physical Gold price touched its historical high in Chennai again. 24 carat 10 gram physical gold sold at Rs 50,990 yesterday.
Story first published: Thursday, July 9, 2020, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X