Gold price updates: தங்கம் விலையானது கடந்த அமர்வில் கிடுகிடு ஏற்றத்தினை கண்டுள்ளது. இன்றும் அதே நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 10 டாலர்கள் குறைந்து காணப்படுகின்றது. எனினும் இந்தியாவில் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய காரணிகளுக்கு இடையே மீண்டும் கிடுகிடு ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆபரணத் தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகிறது.
இது தங்க ஆபரண பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி என்னவாகுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்திற்கு ஆதரவு
அமெரிக்காவின் பிரபல வங்கியான எஸ்விபி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது அமெரிக்காவின் பொருளாதாரம் எந்தளவுக்கு உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் விதமாக காணப்படுகின்றது.
இதற்கிடையில் அமெரிக்காவின் பெடரல் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் மேற்கோண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
.
இதுவும் ஆதரவளிக்கலாம்
அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது இன்றும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்கப்படுகிறது. குறிப்பாக சிலிக்கான் வேலி வங்கி பிரச்சனை என்பது மேற்கோண்டு சந்தைக்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலை ஏற்றம் காண காரணமாக அமையலாம். தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று குறைந்து காணப்பட்டாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
பாதுகாப்பு புகலிடம்
தங்கம் என்பது பாதுகாப்பு புகலிடமாக இருப்பதால் மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக ஷார்ட் கவரிங் என்பதும் தங்கம் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் பங்கு சந்தையிலும் தற்போது ஏற்ற இறக்கம் என்பது அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10 டாலர்கள் குறைந்து, 1906.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.87% குறைந்து, 21.733 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 206 ரூபாய் குறைந்து, 57,436 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 337 ரூபாய் குறைந்து, 66,315 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து, 5390 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 43,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 71 ரூபாய் அதிகரித்து, 5880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 710 ரூபாய் அதிகரித்து, 58,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் குறைந்து காணப்பட்டாலும், ஆபரண வெள்ளி விலையனது இன்று கிராமுக்கு 2.50 ரூபாய் அதிகரித்து, 72 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 2500 ரூபாய் அதிகரித்து, 72,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications