சரிவில் தங்கம் விலை.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

தங்கம் விலையானது கடந்த சில திங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சற்றே அதிகரித்து தான் காணப்படுகின்றது. இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது.

இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்ற இறக்கத்தில் தான் காணப்படுகின்றது. டெக்னிக்கலாக பார்க்கும்போது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

எனினும் டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்தில் காணப்படுவதால், இது இன்னும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றத்தில் பத்திரசந்தை

ஏற்றத்தில் பத்திரசந்தை

பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்றே அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. தற்போதே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் அச்சம் இருந்து வரும் நிலையில் பைசர் நிறுவனம் 3வது டோஸ் தடுப்பூசியானது ஓமிக்ரானில் இருந்து மக்களை காப்பாற்ற உதவலாம் என தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு ஓமிக்ரானில் இருந்து மக்களை காப்பாற்ற உதவும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

பணவீக்கம் குறித்தான தரவு

பணவீக்கம் குறித்தான தரவு

வரவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவு என்பது, முக்கியவத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த கூட்டத்தினை பொறுத்து ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் பற்றிய முக்கிய முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இதுவும் தங்கம் விலையினை நீண்டகால நோக்கில் நிர்ணயிக்கும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

ஆக டாலருக்கு எதிரான தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது பெரியளவில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. இன்று இது ஏற்ற இறக்கத்திலேயே இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையாக அவுன்ஸூக்கு 1772 - 1758 டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவலால 1800 - 1812 டாலர்களாக உள்ளது.

வேலையின்மை நலன் குறித்த டேட்டா

வேலையின்மை நலன் குறித்த டேட்டா

இன்று மாலை வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்த டேட்டா, தங்கத்தின் விலையில் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக இருக்கலாம். இதுவும் டாலரின் மதிப்பில் எதிரொலிக்கலாம். இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது இன்று மாலை அமர்வில் பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து 1784.80 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது.இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.52% குறைந்து, 22.315 டாலர்களாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வினை காட்டிலும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. எனினும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தற்போது ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 48,072 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வினை காட்டிலும் சற்று கீழாக வர்த்தகமாகி வருகின்றது. மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 173 ரூபாய் குறைந்து, 61,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையானது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 4514 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 36,112 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையிருக்கும்பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையின் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 4925 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 39,400 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,250 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் இது தேவையிருக்கும்பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 655 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் இன்று சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+