தங்கம் விலையானது முன்னதாக தொட்ட உச்சத்தினை விட, 1000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, 43,760 ரூபாயாக சரிவினைக் கண்டு காணப்படுகிறது. இதே 24 கேரட் தங்கம் விலை 8 கிராமுக்கு 47,736 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே சென்னையில் 22 கேரட் தங்கம் 10 கிராமுக்கு 54,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே மும்பையில் 10 கிராமுக்கு 54,200 ரூபாயாகவும், டெல்லியில் 10 கிராமுக்கு 54,350 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மற்ற முக்கிய நகரங்களில் விலை?
கொல்கத்தா - 10 கிராமுக்கு - ரூ.54,200
பெங்களூர் - 10 கிராமுக்கு - ரூ.54,250
ஹைத்ராபாத் - 10 கிராமுக்கு - ரூ.54,200
கேரளா - 10 கிராமுக்கு - ரூ.54,200
புனேவில் 10 கிராமுக்கு - ரூ.54,200
கோயம்புத்தூரில் 10 கிராமுக்கு - ரூ.54,700
மதுரையில் 10 கிராமுக்கு - ரூ.54,700
புராபிட் புக்கிங் இருக்கலாம்
தொடர்ந்து மத்திய வங்கியானது வட்டி விகிதம் என்பதை அதிகரித்து வரும் நிலையில், இனியும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 10 கிராமுக்கு எம்சிஎக்ஸ் சந்தையில் 58,648 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணமாக சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சர்வதேச சந்தையில் விலை 1938 - 1946 டாலர்களுக்கு இடையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் கணிப்பு?
நிபுணர்களின் கணிப்பு தங்கம் விலையானது உடனடியாக அடுத்ததாக 1920 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கினால் இது 1980 - 2010 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 58,100 ரூபாய் என்ற முக்கிய சப்போர்ட் லெவலையும் எட்டலாம். எப்படியிருப்பினும் தங்கம் விலையானது குறைந்தால் வாங்கலாம். இது 57,800 - 59,500 ரூபாய் என்ற லெவலுக்கு இடையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்தால் வாங்கலாம்.
கவனம் இது தான்?
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கணிப்பின் படி, பெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அமெரிக்க மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையானது தங்கம் விலையை ஊக்குவிக்கலாம். ஆக நிபுணர்கள் தொடர்ந்து தங்கம் விலை குறையும்போது வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications