Gold: தங்கம் விலையானது கிட்டதட்ட 2000 டாலர்களுக்கு அருகில் காணப்படுகிறது.இது தொடர்ந்து தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆன 1980 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆக மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து டாலரின் மதிப்பும் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதோடு அமெரிக்க பத்திர சந்தையின் தேவை சரியலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக இதுவும் சந்தைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
வட்டி அதிகரிப்பு இருக்குமா?
அமெரிக்க மத்திய வங்கி கூட்டமானது மே மாதம் நடக்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மற்றொரு தரப்பு மீண்டும் 2023ல் ஒரு அதிகரிப்பு இருக்கலாம் என கணித்துள்ளனர். ஆக இது மேற்கோண்டு தங்கம் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு?
கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது டாலரின் மதிப்பானது சற்றே மென்மையாக காணப்படும் நிலையில், மீண்டும் ஏற்றம் காணலாம். சர்வதேச சந்தையில் 2000 டாலர்களை உடைத்து மேலே செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய பியூச்சர் சந்தையில் 10 கிராமுக்கு 60,000 ரூபாய்க்கு மேலாக காணப்படுகிறது. இதே வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு 24 டாலர் என்ற லெவலிலும், இந்தியா சந்தையில் 72,500 ரூபாயாகவும் காணப்படுகிறது.
வங்கி நெருக்கடி
வங்கி துறையில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் பங்கு சந்தையில் பலத்த ஏற்ற இறக்கம் என்பது நிலவி வருகின்றது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. ஆக தங்கம் விலையானது விரைவில் புதிய உச்சத்தினை எட்டலாம். எனினும் முதலீட்டாளர்கள் தங்கம் விலையானது நிலையான ஒரு லெவலை எட்டும் வரையில் பொறுத்திருந்து முதலீடு செய்வது நல்லது.
ஸ்பாட் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1998 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கேப் அப் ஆகி மேலாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு 0.33% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.33% அதிகரித்து, 24.067 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பியூச்சர் தங்கம் நிலவரம்
இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்தவரையில் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனும் விதாமாகவே காணப்படுகிறது. இதில் 10 கிராமுக்கு தற்போது 184 ரூபாய் அதிகரித்து, 59,500 ரூபாயாக காணப்படுகிறது. டெக்னிக்கலாகவும் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பியூச்சர் வெள்ளி விலை
இந்திய பியூச்சர் சந்தையில் தங்கத்தினை போல வெள்ளி விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. இது கிலோவுக்கு 331 ரூபாய் அதிகரித்து, 72,102 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 5590 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 44,720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து, 6098 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 270 ரூபாய் அதிகரித்து, 60,980 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.30 ரூபாய் அதிகரித்து, 77.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1300 ரூபாய் அதிகரித்து, 77,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications