Gold: தங்கம் விலையானது டாலரில் 2060 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு விரைவில் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியம் டெர்மில் அதன் முக்கிய லெவலாக 2074.85 டாலர்களாக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், இதன் எதிரொலியானது இந்திய சந்தையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கலாகவும் பியூச்சர் சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் எதிரொலி ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பும் 100.85 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தொடர்ந்து பணவீக்கம் என்பதும் தற்போது மெதுவாக தொடங்கியுள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், வங்கி நெருக்கடி, ரஷ்யா உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட அரசியல் பதற்றங்கள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இது மேற்கோண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இத்தகைய பல்வேறு சூழலுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 1.95 டாலர் அதிகரித்தும், 2057 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது டெக்னிக்கலாக இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு 0.64% அதிகரித்து, 26.098 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது டெக்னிக்கலாக இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய எம்சிஎக்ஸ் சந்தையானது இன்று விடுமுறையாகும். இது கடந்த அமர்வில் 10 கிராமுக்கு 627 ரூபாய் அதிகரித்து, 61,255 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதுவும் மேற்கொண்டு நீண்டகால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல வெள்ளி விலையும் இந்திய கமாடிட்டி சந்தையில் கிலோவுக்கு கடந்த அமர்வில் 1097 ரூபாய் அதிகரித்து, 77,010 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதுவும்டெக்னிக்கலாக தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் சென்னையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 5720 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 45,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 6240 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 10 கிராமுக்கு 550 ரூபாய் அதிகரித்து, 62,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதே ஆபரண வெள்ளியினை பொறுத்தவரையில் கிராமுக்கு 1.20 ரூபாய் அதிகரித்து, 83 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து, 83,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Disclaimer: Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications