தங்கம் விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டாலும், பணவீக்கமும் தங்கத்திற்கு எதிராக உள்ளது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
மேலும் பிசிகல் தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

comex தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1.45 டாலர்கள் அதிகரித்து, 1721.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

comex வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையானது சற்று ஏற்றம் கண்டு இருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.04% குறைந்து, 25.895 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

MCX தங்கம் விலை
இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 105 ரூபாய் அதிகரித்து, 44,855 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. தங்கம் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 66,874 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

அதிகரிக்கும் பத்திர லாபம்
அமெரிக்காவில் கொரோனா ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் கடைசி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து 10 வருட பத்திர லாபமும் அதிகரித்து வருகின்றது. இது ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு லாபத்தினை கொடுத்துள்ளது. அதோடு ஊக்கத்தொகைகள் அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்
தற்போது உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகளும் ஆதாரவாக வந்து கொண்டுள்ளன. இதோடு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளன. இதனால் இதுவும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. கேண்டில் பேட்டர்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, பலத்த சரிவில் காணப்படுவதால், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாமனிய மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட கால நோக்கிலும் தங்கம் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.