குறைந்த விலையில் தங்கம்.. தீபாவளிக்கு நல்ல சான்ஸ் தான்.. எப்படி வாங்கலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த மூன்று தினங்களாகவே தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.

 

vஇது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலை குறையவில்லை என்றாலும் அதிகளவில் அதிகரிக்கவில்லை என்பது நல்ல விஷயமே. அதுவும் இந்த விழாக்கால பருவத்தில் மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பலரும் இந்த விழாக்கால பருவத்தில் தாங்கள் வாங்கும் போனஸ்களை தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். இதனால் தான் இந்த விழாக்கால பருவத்தில் தங்கம் விலையானது குறைவான விலையில் இருப்பது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

நீண்டகால நோக்கில் வாங்கலாம்

நீண்டகால நோக்கில் வாங்கலாம்

தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தோடு ஒப்பிடும்போது அது குறைவு தான். ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்டது. இன்று 50,680 ரூபாயாக தற்போது காணப்படுகிறது. ஆக அந்த வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது 5,520 வீழ்ச்சி கண்டுள்ளது.

தங்கத்தினை எப்படி வாங்கலாம்?

தங்கத்தினை எப்படி வாங்கலாம்?

அதெல்லாம் சரி தங்கத்தினை ஆபரணமாக வாங்கினால், அதற்கு செய்கூலி சேதாரம் உண்டு. திரும்ப விற்கும் போதும் அதன் மதிப்பு குறைக்கப்படும், எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பு என்பது கவலை கொள்ளும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனாலேயே இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தங்கம் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் தங்கம் என்ன வடிவில்?
 

டிஜிட்டல் தங்கம் என்ன வடிவில்?

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு என்றாலும் அதில் பலவகை உள்ளது. ஒன்று தங்க பத்திரம் (Gold ETF), தங்க பண்டுகள், தங்கம் சார்ந்த பங்குகள், எம்சிஎக்ஸ் கோல்டு இப்படி பலவற்றிலும் முதலீடு செய்து கொள்ளலாம். அதிலும் இதற்கான கட்டணங்கள் மிகவும் குறைவு தான். அதோடு செய்கூலி, சேதாரம், விலை தள்ளுபடி, தேய்மானம் என்ற பிரச்சனை இல்லை. அன்றைய விலைக்கே விற்றும் கொள்ளலாம். ஆக விலை நிலவரத்திற்கு ஏற்ப உங்களது லாபம் இருக்கும். அதோடு இதில் அளவு என்பது டிஜிட்டல் வடிவில் என்பதால் யாரும் உங்களை ஏமாற்றவும் முடியாது. ஆக பிசிகல் தங்கத்தினை விட தற்போதைய காலத்தில் டிஜிட்டல் தங்கமே நல்ல ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறைவு தான்?

தங்கம் விலை குறைவு தான்?

தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தோடு ஒப்பிடும்போது அது குறைவு தான். ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்டது. இன்று 50,680 ரூபாயாக தற்போது காணப்படுகிறது. ஆக அந்த வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது 5,520 வீழ்ச்சி கண்டுள்ளது.

தங்கம் தேவை

தங்கம் தேவை

தங்கம் தேவையானது படிப்படியாக மீண்டு வருகிறது. குறிப்பாக தந்தேராஸ் மற்றும் தீபாவளி நாட்களில் அதிகளவில் தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். இது சரிவில் உள்ள தேவையை மீட்டுக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்று அகில இந்தியா ஜெம் அண்ட் ஜூவல்லர்ஸ் கவுன்சில் தலைவர் அனந்த பத்மசாமி பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட தாக்கம் பரவி வருவதாக அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் முடக்கப்படலாம். ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு?

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு?

அமெரிக்கா, ஐரோப்பிய வங்கிகள் வட்டி விகிதத்தினை குறைவாக வைத்திருந்தாலும், அமெரிக்காவின் ஊக்கத் தொகை மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆக இது பெரியளவில் வருமா? என்பதே முதலீடாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இன்று காலை தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.20 டாலர்கள் அதிகரித்து, 1877.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும் போது தங்கம் விலை சரிவிலேயே காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது தற்போது 0.05% அதிகரித்து, 24.317 டாலர்களாக காணப்படுகிறது. நேற்று வெள்ளியின் விலையானது 24.306 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 24.323 டாலர்களாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 100 ரூபாய் அதிகரித்து 50,707 ரூபாயாக காணப்படுகிறது. நேற்று தங்கம் விலையானது 50,600 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,665 ரூபாயாகவே தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையும், இந்திய கமாடிட்டி சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 62,750 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் 62,739 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 62,539 ரூபாயாக தொடங்கியுள்ளது.

தங்கம், வெள்ளி டெக்னிக்கல் லெவல்ஸ்

தங்கம், வெள்ளி டெக்னிக்கல் லெவல்ஸ்

தங்கம்
சப்போர்ட் லெவல்கள் - 50,281, 49,962, 49,389
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,854, 51,108, 51,681

வெள்ளி -
சப்போர்ட் லெவல்கள் - 62,224, 61,709, 60,759
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,174, 63,609, 64,559

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. விழாக்கால பருவத்தில் தங்கம் விலையானது இவ்வாறு உள்ளது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price update: what is the best way to buy gold?

Gold and silver prices struggling in last few days, it’s a good chance to but in long term
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X