கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பளிச் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில், தொடர்ந்து பலத்த உச்சத்தினை தொட்டது.

 

இது வரும் வாரத்திலும் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி மிக குறைவு.. உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க பிஎன்பி தான் சரியான சாய்ஸ்.. எவ்வளவு தெரியுமா..? வட்டி மிக குறைவு.. உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க பிஎன்பி தான் சரியான சாய்ஸ்.. எவ்வளவு தெரியுமா..?

இனி இது குறையவே குறையாதா? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய காரணிகள் என்னென்ன? குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்கள் விலை என்ன? வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரையில் விழாக்கால பருவம் என்றாலே, தங்கத்தின் தேவையானது சற்று அதிகரிக்கும். ஏனெனில் மக்களின் வாழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துள்ள தங்கத்தின் தேவையானது இந்த காலக்கட்டத்தில் அதிகரிக்கும். கடந்த 2 ஆண்டு காலமாகவே இந்த காலத்தில் தேவையானது, கொரோனாவால் மிகமோசமான வீழ்ச்சியை கொண்டிருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் அதிகரிக்கும் என பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை போலவே தங்கத்தின் தேவையும் சென்ற ஆண்டுகளை காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி

தங்கம் விலை வீழ்ச்சி


தற்போது சர்வதேச பங்குச் சந்தைகள் மற்றும் மெட்டல்கள், மற்ற முதலீடுகள் என பலவும் உச்சத்தில் காணப்பட்டன. இதனால் இவைகள் முதலீட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இதனால் தங்கத்தின் விலையானது நடப்பாண்டில் பெரிய அளவில் ஏற்றம் தரவில்லை. இதே கடந்த ஆண்டில் தங்கத்தின் விலையானது 56,200 ரூபாய் என்ற உச்சத்தினை தொட்டது. அதனுடன் ஒப்பிடும்போது 15% அல்லது 8,700 ரூபாய்க்கும் மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகிறது.

குறைந்த விலையில் தங்கம்
 

குறைந்த விலையில் தங்கம்

கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் தங்கம் வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், குறைவாக உள்ள வட்டி விகிதம், டாலரின் மதிப்பு வலுவிழந்து காணப்படுகிறது. இது போன்ற பல காரணிகள் தங்கத்திற்கு ஆதரவாக இருந்து வந்தாலும், தொடர்ந்து மற்ற முதலீடுகள் லாபகரமான முதலீடாக இருந்து வருகின்றன.

.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றம் காணாவிட்டாலும், வரவிருக்கும் மாதங்களில் தங்கத்தின் விலையானது தலைகீழாக மாற்றம் காணலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

உலகின் மிகப் பெரிய இறக்குமதியாளராக இருந்து வரும் இந்தியா, நடப்பு ஆண்டில் 800 - 900 டன் தங்கத்தை சராசரியாக இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நகையின் தேவை அதிகம் உள்ளதே. நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு வரவிருக்கும் ஆண்டில் விலையை அதிகரிக்கலாம் என்ற நேர்மறையான கண்ணோட்டம் இருந்து வருகிறது. இது வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வரும், பணவீக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மெதுவான வளர்ச்சி

அமெரிக்காவில் மெதுவான வளர்ச்சி

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய அறிவிப்புகள் பற்றி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் மெதுவான வளர்ச்சி கண்டு வரும் நிலையில் இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது வரும் வாரங்களில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் இலக்கு

தங்கத்தின் இலக்கு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் அடுத்த இலக்கு 2,000 டாலர்கள் வரையில் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையில் அடுத்த 12 மாதங்களில் 10 கிராமுக்கு 52,000 - 53,000 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை 8,700 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது வார தொடக்கத்தில் சற்று குறைவது போல இருந்தாலும், பிற்பாதியில் மீண்டும் ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1785.30 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 1758.50 டாலர்களாக காணப்பட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1820.10 டாலர்களை தொட்டது. முடிவில் 1819.95 டாலர்களாக முடிவடைந்தது. இது நீண்டகால நோக்கில் இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவினைக் கண்டு, பின்னர் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 23.985 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 23.045 டாலர்கள் வரையில் சென்று, வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 24.255 டாலர் வரையில் சென்றது. முடிவில் 24.250 டாலர்களாகவும் முடிவுற்றது..

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடக்கத்தில் ஏற்றம் கண்டு பின்னர் சரிவினைக் கண்டது. எனினும் வார இறுதியில் சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,615 ரூபாயாக தொடங்கிய நிலையில், எனினும் புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 46,872 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 48,014 ரூபாயாக அதிகரித்தது. எனினும் முடிவில் 47,972 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,700 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

 

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 64,449 ரூபாயாக தொடங்கிய நிலையில், புதன் கிழமையன்று 62,002 ரூபாயாக குறைந்தது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 64,480 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 64,332 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 13,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தவிர, மற்ற நாட்கள் ஏற்றத்திலும் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,008 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,542 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,338 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் மூன்று நாட்கள் தவிர, மற்ற நாட்கள் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,110 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை மாற்றமில்லாமல் 49,550 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 687 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு சற்று குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் கவனித்து வாங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்தின் விலை மீடியம் டெர்மில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold market remains positive amid global cues

Gold price weekly update; gold market remains positive amid global cues/ கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பளிச் கணிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X