கிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் குறையுமாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து, உச்சத்தினை தொட்டு வருகின்றது. நிபுணர்களின் கணிப்பினை போல மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டு விடுமோ? என்பது போல் ஏற்றம் காண ஆரம்பித்து விட்டது.

தங்கம் விலையானது 1800 டாலர்களை உடைத்து சென்றால், அது அடுத்ததாக 1814 டாலர்கள் என்பது முக்கிய லெவலாக பார்க்கப்பட்டது.

நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..! நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆனால் நடப்பு வார கடைசி வர்த்தக நாளில், வெள்ளிக்கிழமையன்று 1820.25 டாலர்களாக முடிவுற்றது. ஆக வரும் வாரத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொடலாமோ என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

ஏனெனில் வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் குறைவது போல் காணப்பட்டாலும், பற்பாதியில் மீண்டும் உச்சம் தொட்டது. இதற்கிடையில் இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? கடந்த ஆண்டு உச்சத்தினை தொட்டு விடுமா? நிபுணர்களின் கணிப்பினை போல முக்கிய லெவல்களை உடைத்துக் காட்டியுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் பற்றிய கணிப்பு

பொருளாதாரம் பற்றிய கணிப்பு

முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினால் முடங்கிய பொருளாதாரமே, தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவும் நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது?

வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது?

இந்தியாவினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாகவே காணப்படுகின்றது. இது அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மெதுவாக பத்திரம் வாங்குவது குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். எனினும் வட்டி விகிதம் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என்றும் கூறப்படுகின்றது. இது தங்கத்தில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தங்கம் விலையினை சற்று அழுத்தத்திற்கு உண்டாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அதிகரிக்கலாம்

எப்போது அதிகரிக்கலாம்

2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதுவரையில் தங்கம் விலையில் பெரியளவிலான ஏற்றம் இருக்காது என்கிறது ஒரு ஆய்வு. ஆக நிபுணர்கள் சொல்வது போல தங்கம் விலையானது அதிகரித்தாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், அதுவரையில் பெரியளவில் தங்கம் விலையானது அதிகரிக்காது என்ற கருத்தே நிலவி வருகின்றது.

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

பொருளாதாரத்திற்கு சாதகமான அறிகுறிகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. தங்கம் விலையானது அதிகரித்தாலும், பெரியளவில் ஏற்றம் காணாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வேலையின்மை என்பது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தொழிற்துறை குறித்தான அறிவிப்புகளும் தொடர்ந்து சாதகமாக வந்து கொண்டுள்ளன. ஆக இதெல்லாம் தங்கம் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினையே கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் வழக்கம்போல அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், பின்னர் குறைந்து, வார இறுதியில் குறையத் தொடங்கியது. கடந்த திங்கட்கிழமையன்று 1781.20 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1778 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1821.90 டாலர்களை தொட்டது. முடிவில் 1820.25 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் காண ஆரம்பித்தது. கடந்த திங்கட்கிழமையன்று 22.985 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 22.925 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 24.135 டாலர்கள் வரையிலும், முடிவில் 24.040 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. வார இறுதியில் மட்டும் 2.08% ஏற்றம் கண்டுள்ளது

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,215 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 47,731 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 46,820 ரூபாயினை தொட்ட நிலையில், முடிவில் 47,538 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று (செப்டம்பர் காண்ட்ராக்ட்) 62,830 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 62,422 ரூபாயினை தொட்டு, மீண்டும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 63,751 ரூபாயினை தொட்டது. முடிவில் 63,585 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 14,100 ரூபாய்க்கும் மேல் குறைவாகவே காணப்படுகின்றது. ஆக வெள்ளியினை நீண்டகால நோக்கில் வாங்க நவம்பர் காண்ட்ராக்டில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று சவரனுக்கு 35.880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,508 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் இது பெரியளவில் குறையுமா? என்ற சந்தேகத்தினையே நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. மூன்று நான்கு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,660 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,180 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 687 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 66,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என்றால், நடப்பு ஆண்டில் பெரியளவில் ஏற்றம் காணாது என்று கூறுவதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold price may fall soon as US federal announces tapering timeline

Gold weekly updates.. Gold price weekly update; gold price may fall soon as US federal announces tapering timeline
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X