தங்கம் விலை குறையவே குறையாதா.. தொடர்ந்து ரூ.36,000 மேல் விற்பனை.. இனி குறையுமா.. !

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் உச்சத்தினை மீண்டும் தொட்டு விடுமோ? என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் குறைவது போல் காணப்பட்டாலும், பற்பாதியில் மீண்டும் உச்சம் தொட்டது.

இதற்கிடையில் இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? கடந்த ஆண்டு உச்சத்தினை தொட்டு விடுமா? இதனையும் உடைக்குமா? ஏற்கனவே 1832 டாலர்களை தொட்டு, மீண்டும் 1800 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

தங்கத்தின் விலையில் தள்ளுபடி

தங்கத்தின் விலையில் தள்ளுபடி

கடந்த வாரத்தில் எதிர்பாராத விதமாக வார இறுதியில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினைக் கண்டது. இது குறைந்த விலையில் வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி ஆபணரத் தங்கத்திலும் விழுந்துள்ளது எனலாம். எனினும் தங்க டீலர்கள் தங்கத்தின் விலையில் சற்று தள்ளுபடியை வழங்கினர். இது ஆபரணத் தங்கத்தின் விலையை அதிகளவில் ஏற்றத்தினை தடுத்துள்ளது.

பொருளாதாரம் பற்றிய கணிப்பு

பொருளாதாரம் பற்றிய கணிப்பு

முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினால் முடங்கிய பொருளாதாரமே, இன்னும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், மூன்றாவது அலை என்ன செய்யப்போகிறதோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் பல மதிப்பீட்டு நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை குறைத்து வருகின்றன.

பலன் இருக்குமா?

பலன் இருக்குமா?

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவில் இருந்து, தடுப்பூசி மக்களை காப்பாற்ற எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும் இந்தியாவில் பல கோடி மக்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி என்பது தற்போதைக்கு நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

எப்படியிருப்பினும் தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் வழக்கம்போல அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், வார இறுதியில் குறையத் தொடங்கியது. கடந்த திங்கட்கிழமையன்று 1802.30 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே புதன்கிழமையன்று குறைந்தபட்ச விலையாக 1790.70 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1832.60 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1812.30 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே சரிவினையே கண்டது. எனினும் பிற்பாதியில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 25.270 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 24.515 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வியாழக்கிழமையன்று 25.875 டாலர்கள் வரையிலும், வெள்ளிக்கிழமையன்று 25.547 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,647 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 47,367 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 48,310 ரூபாயினை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 47,846 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8300 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 67,156 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 65,656 ரூபாயினை தொட்டு, மீண்டும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 68,490 ரூபாயாயினை தொட்டது. வெள்ளிக்கிழமையன்று முடிவில் 67,847 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,100 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,160 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,547 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,376 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் இது பெரியளவில் குறையுமா? என்ற சந்தேகத்தினையே நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. நான்கு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,310 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,620 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 730 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,000 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 72,100 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,000 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்துள்ளது.

டாலர் நிலவரம்

டாலர் நிலவரம்

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் தற்போதைக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விகிதம், பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் என அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. எனினும் இன்னும் முழுமையாக மீண்டு வர வில்லை. இதனால் தற்போதைக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை எனலாம்.

உருமாற்றம் அடைந்த கொரோனா

உருமாற்றம் அடைந்த கொரோனா

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, நடப்பு மாதத்தில் பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது உருமாற்றம் அடைந்த கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளிலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தூண்டுகின்றது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+