தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. கணிப்பு என்ன!

தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினை கண்டாலும், வார இறுதியில் மீண்டும் தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது வரும் வாரத்திலும் குறையுமா? அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய காரணிகள் என்னென்ன?

குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்கள் விலை என்ன? ஆபரண வெள்ளியின் விலை என்ன? தற்போது வாங்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

தொடர்ச்சியாக கடந்த சில வாரமாகவே தங்கம் விலையானது 46,000 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையில் டெக்னிக்கலாக இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது. எப்படியிருப்பினும் அதிகளவிலான விலை சரிவானது, தங்க முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம்.. இது அதிகளவிலான விலை சரிவினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாக, வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இந்த நிலையானது வரும் வாரத்தில் தொடரும்பட்சத்தில், தங்கம் விலையானது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து ஏற்றம் காணும் பங்கு சந்தைகள்

தொடர்ந்து ஏற்றம் காணும் பங்கு சந்தைகள்

சர்வதேச பங்குச் சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய தொடங்கியுள்ளன. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படுகிறது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.

உச்சத்தில் இருந்து ரூ.10,200-க்கு வீழ்ச்சி

உச்சத்தில் இருந்து ரூ.10,200-க்கு வீழ்ச்சி


தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. குறிப்பாக உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை 10,200 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் உச்சத்தில் இருந்து பலத்த வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் விழாக்கால பருவம் மற்றும் திருமண விழாக்களினால், தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகிறது.

ஆறு மாத சரிவில் தங்கம் விலை

ஆறு மாத சரிவில் தங்கம் விலை

மீடியம் டெர்மில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது, வரவிருக்கும் நாட்களிலும் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கிட்டத்தட்ட ஆறு மாத குறைந்த விலையில் காணப்படும் தங்கம் விலையானது வாடிக்கையாளர்களை வாங்க தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

அமெரிக்க டாலர் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

வட்டியில் மாற்றம்?

வட்டியில் மாற்றம்?

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூன்றாவது அலை குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக இதுவும் வரும் வாரங்களில் சந்தையில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது வார தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டாலும், பிற்பாதியில் அதே அளவு சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1754.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று அதிகபட்சமாக 1788.40 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1737.50 டாலர்களையும் தொட்டது. வெள்ளிக்கிழமையன்று முடிவில் சற்றே ஏற்றம் கண்டு 1743.70 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 11 டாலர்களுக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 22.330 டாலர்களாக தொடங்கிய நிலையில், இதே புதன்கிழமையன்று அதிகபட்சமாக 23.150 டாலர் வரையில் சென்றது. வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 22.090 டாலர்கள் வரையிலும் சென்று, முடிவில் 22.415 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே, இந்த வாரம் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடத்தில் ஏற்றம் கண்டாலும், வார இறுதியில் சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 45,930 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 46,799 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 45,787 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 45,995 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,200 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 59,531 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 61,400 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 59,310 ரூபாய் வரையில் சென்று, பின்னர், 59,955 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 17,700 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் இரு நாட்கள் தவிர, மூன்று நாட்கள் சரிவிலும், இரு நாட்கள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 34,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,357 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,856 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,700 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இரு நாட்கள் தவிர, மற்ற நாட்கள் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 47,560 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 47,530 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 64.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 641 ரூபாயாகவும், கிலோவுக்கு 64,100 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 64,200 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 64,100 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு சற்று குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் கவனித்து வாங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்தின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+