9 மாத உச்சத்திலிருந்து வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இனியும் சரியுமா.. இனி எப்படியிருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே அவுன்ஸூக்கு 1870 - 1850 டாலர்களுக்கு உள்ளேயே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 1850 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு முடிவு விலையும் 1847.05 டாலர்களாக முடிவுற்றுள்ளது.

முக்கிய சப்போர்ட் லெவலை உடைத்து காட்டியுள்ள நிலையில், இது வரும் வாரத்திலும் குறையுமா? இனி எப்படி இருக்கும்?

குறிப்பாக சர்வர்தேச சந்தையில் 5 நாட்களில், 1 நாள் மட்டும் அதிகரித்தும், மற்ற நாட்கள் சரிவிலும் காணப்பட்டது.

வரும் வாரத்தில் குறையுமா?

வரும் வாரத்தில் குறையுமா?

இவ்வாறு ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்துள்ள தங்கம் விலையானது, வரும் வாரத்தில் குறையுமா? அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்ககத்தின் விலை என்ன? வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

9 மாத உச்சத்தில் தங்கம்

9 மாத உச்சத்தில் தங்கம்

தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் 9 மாத உச்சமான 1879.50 டாலர்களை தொட்டுள்ளது. எனினும் வார இறுதி வர்த்தக நாளில் சரிவில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய சப்போர்ட் லெவலான 1850 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. இது வரும் வாரத்திலும் சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புராபிட் புக்கிங் செய்யலாம்

புராபிட் புக்கிங் செய்யலாம்

சர்வதேச சந்தையில் நடப்பு வாரத்தில் 9 மாத உச்சத்தினை தொட்ட நிலையில், வார இறுதியில் முக்கிய சப்போர்ட் லெவலையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது வரும் வாரத்திலும் புராபிட் புக்கிங் செய்வதால், சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது 1830 - 1850 டாலர்கள் வரையில் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகித மாற்றம்

வட்டி விகித மாற்றம்

எனினும் மத்திய வங்கிகள் தற்போது வரையில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருப்பதால், தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை. எனினும் தற்போது பணவீக்கம் குறித்த அச்சம் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்காவின் மத்திய வங்கி, இதனை பற்றிய முக்கிய முடிவினை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 50,000 ரூபாய் முதல் 51,000 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் எனவும், இதே வெள்ளி விலை கிலோவுக்கு 74,000 ரூபாயாக அதிகரிக்கலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக தங்கம் மற்றும் வெள்ளி விலையானது குறைந்தால் வாங்கி வைக்கலாம்.

டிசம்பர் கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி

டிசம்பர் கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி

இன்னும் இரண்டு வாரங்களில் இந்திய சந்தையில் தங்கத்தின் டிசம்பர் கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், அதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். ஏனெனில் ஏற்கனவே கையில் இருக்கும் ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யலாம். அல்லது புராபிட் புக்கிங் செய்யலாம். இதனால் சந்தையானது சரிவினைக் காணலாம்.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1872.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 1879.50 டாலர்களையும் தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 1844.20 டாலர்களை தொட்டு, முடிவில் 1847.05 டாலர்களாகவும் முடிவுற்றது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 25.425 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 25.490 டாலர்கள் வரையில் சென்று, வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 24.610 டாலர்களை தொட்டது. எனினும் முடிவில் 24.650 டாலர்களாகவும் முடிவுற்றது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 49,170 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 49,610 ரூபாய் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 48,710 ரூபாய் வரையில் குறைந்து, முடிவில் 48,828 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 7400 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 66,669 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 67,170 ரூபாய் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 65,300 ரூபாயினை தொட்டது. முடிவில் 65,556 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 12,400 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் இரு நாட்கள் தவிர, மற்ற நாட்கள் சரிவிலும், இன்று மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 37,048 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,621 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 6,600 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இரு நாட்கள் தவிர, மற்ற நாட்கள் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 50,520 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை மாற்றமில்லாமல் 50,410 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 70.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 704 ரூபாயாகவும், கிலோவுக்கு 70,400 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 71,000 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 70,400 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு சற்று குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் கவனித்து வாங்கலாம். மீடியம் டெர்மில் பல காரணிகளும் விலை குறைய காரணமாக உள்ளது. ஆக நாளை சற்று பொறுத்திருந்து வர்த்தகம் தொடங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்திறு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold prices dips after 9 month high, is it a right time to buy

Gold price weekly update; gold prices dips after 9 month high, is it a right time to buy/9 மாத உச்சத்தில் இருந்து வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இனியும் சரியுமா.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X