செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இந்த வாரத்தில் ஒரு நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களும் சரிவில் தான் காணப்பட்டது.

இது வரும் வாரத்திலும் சற்று சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் இன்னும் குறைந்தால், எவ்வளவு குறையும்? எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய காரணிகள் என்னென்ன?

 ஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..! ஒரு முறை முதலீடு.. மாதந்தோறும் வருமானம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..!

இந்திய சந்தையில் தங்கம் விலை என்ன? ஆபரணத் தங்கம் விலை என்ன? ஆபரண வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பிரீமியம் விலையில் தங்கம்

பிரீமியம் விலையில் தங்கம்

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாக தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் தங்க விற்பனையாளர்கள் அதிகாரபூர்வ உள்நாட்டு விலைகளை விட அவுன்ஸூக்கு 2 டாலர் பிரீமியம் வசூலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த வாரத்தில் இந்த விகிதம் மாறாமல் இருந்த நிலையில், இந்த வாரம் அதிகரித்துள்ளது.

 

தேவை குறைந்து விட்டது

தேவை குறைந்து விட்டது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் திருத்தம் இருந்தாலும், தேவை குறைவாகவே இருந்தது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரீமியம் விலையில் 10,75% இறக்குமதி வரியும் + 3% ஜிஎஸ்டி வரியும் அடங்கும்.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

இந்தியாவினை பொறுத்தவரையில் எண்ணெய் மற்றும் தங்கம் என்பது முக்கிய இறக்குமதிகளாக உள்ளன. இந்த பொருட்கள் இறக்குமதியானது மொத்த இறக்குமதியில் முறையே 27.3% மற்றும் 6.5% ஆக உள்ளதாக மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

கடந்த வாரத்தில் வலுவான டாலரின் மதிப்பு காரணமாக தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது. அதோடு அமெரிக்க பத்திர லாபமும் ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், இதுவும் தங்கத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

அமெரிக்க டாலர் மற்றும் பத்திர லாபம் அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

டெல்டா கொரோனா அச்சம்

டெல்டா கொரோனா அச்சம்

ஒரு புறம் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெல்டா கொரோனாவின் தாக்கமானது அச்சம் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றது. பரவி வரும் கொரோனாவின் காரணமாக ஏற்கனவே பல நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தங்கத்தின் அதிக விலை சரிவினைக் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

வட்டியில் மாற்றம் இருக்குமா?

வட்டியில் மாற்றம் இருக்குமா?

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என்ற நிலை இருந்தாலும், மூன்றாம், அலையின் அச்சம் இருந்து வருகின்றது. இது குறித்து முதலீட்டாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவும் வரும் வாரங்களில் சந்தையில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

இரண்டாம் கட்ட பரவல் என்பது குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூன்றாம் கட்ட பரவல் குறித்த அச்சமும் இருந்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் விலையை இது ஆதரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பலத்த சரிவிலேயே காணப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல சரிவினைக் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1829.95 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 1833.50 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1785.10 டாலர்களையும் தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் சற்றே ஏற்றம் கண்டு 1788.50 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 41 டாலர்களுக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் பலத்த சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 24.808 டாலர்களாக தொடங்கிய நிலையில், இதே செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 24.895 டாலர் வரையில் சென்றது. வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 23.760 டாலர்கள் வரையிலும் சென்றது. முடிவில் 23.762 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என்பதால், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,433 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 47,497 ரூபாயாக அதிகரித்தது.எனினும் வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 46,713 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 46,806 ரூபாயாக முடிவுற்றது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 625 ரூபாய் சரிவில் தான் காணப்பட்டது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,300 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும், சரிவில் காணப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 65,377 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 65,513 ரூபாயாக தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 63,479 ரூபாய் வரையில் சென்று பின்னர், 63,592 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 14,100 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் ஒரு நாள் தவிர மற்ற அனைத்து நாட்களும் குறைந்து காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,832 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,439 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,000 ரூபாய் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் ஒரு நாள் தவிர மற்ற நாட்கள் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,860 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,390 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 680 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,000 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 69,600 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,000 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ,1600 ரூபாய் குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்து வாங்கலாம். சந்தையின் போக்கினை பொறுத்து கவனித்து வாங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; Gold prices drop to near lowest in one month, silver also falls sharply

Gold prices may down in medium term due to dollar strength, gold price falls Rs.9,300 from record high. is it a good time to invest in gold right now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X