பலத்த சரிவினை கண்ட தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் யாரும் எதிர்பாராத அளவில் வாரயிறுதியில் பலத்த சரிவை கண்டது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் தங்கம் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல தங்கத்தின் விலையானது ஆரம்பத்தில் சற்று ஏற்றம் காணுவது போல தொடங்கினாலும், வார இறுதியில் பலத்த சரிவை கண்டிருந்தது, வர்த்தகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

இவ்வாறு பலத்த சரிவை கண்டு வந்துள்ள நிலையில், இது வரும் வாரத்திலும் குறையுமா? அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய காரணிகள் என்னென்ன? குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்கள் விலை என்ன? வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

சர்வதேச சந்தையில் எதிரொலியாக கடந்த வாரத்தில் தங்கம் விலையானது, இந்திய சந்தையில் வார இறுதியில் பலத்த சரிவை கண்டு முடிவடைந்திருந்தது. இது கடந்த வாரத்தில் 10 கிராமுக்கு 47,000 ரூபாய் முதல் 49,000 ரூபாய் வரையில் வர்த்தகமானது. இதற்கிடையில் தங்கத்தின் விலையானது அடுத்த 12 மாதங்களில், அதாவது ஒரு வருடத்தில் 10 கிராமுக்கு 52,000 - 53,000 ரூபாய்க்கு மேலாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் தங்கம்

முந்தைய ஆண்டுகளில் தங்கம்

கடந்த 2019 ஆம் ஆண்டு தங்கத்தின் விலையானது 52% அதிகரித்தும், 2020 ஆம் ஆண்டில் 25%ம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நடப்பாண்டில் இது எந்தளவுக்கு அதிகரிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த நிலையில் நிபுணர்கள், நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

மோதிலால் ஆஸ்வால் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அதன் விலையானது கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், தங்கம் விலையானது பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. மேலும் தீபாவளி சமயத்திலும் தங்கத்திற்கான தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில் இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என கூறியுள்ளது.

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

நடப்பாண்டின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில் பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதை உணர முடிகின்றது. இது வரவிருக்கும் மாதங்களில் தங்கத்திற்கு சாதகமாக இல்லாவிட்டாலும், சந்தையில் பணவீக்கம் குறித்த அச்சமும் இருந்து வருகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மெதுவான வளர்ச்சி

அமெரிக்காவில் மெதுவான வளர்ச்சி

அதோடு தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் மெதுவான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், அங்கு பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கை பற்றி மீண்டும் ஆலோசிக்கலாம் என்ற கருத்தும் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலையானது அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி அதிகரிப்பு

இறக்குமதி அதிகரிப்பு

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு தீபாவளி பருவத்தில், கொரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் நகை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் தங்கத்தின் தேவையானது பெருமளவு சரிவை கண்டது. ஆனால் நடப்பு ஆண்டில் அப்படி இல்லை. இறக்குமதி விகிதமானது செப்டம்பர் காலாண்டில் 47% அதிகரித்து, 139.1 டன்னாக அதிகரித்துள்ளது.

உச்சத்தில் பங்கு சந்தைகள்

உச்சத்தில் பங்கு சந்தைகள்

இதற்கிடையில் நடப்பாண்டில் பங்குச்சந்தை உள்ளிட்ட முக்கிய முதலீடுகளும், இதுவரையில் பலமான ஏற்றத்தை கண்டுள்ளன. இது சந்தையில் உச்சத்தில் காணப்படும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம். இது மேற்கொண்டு வரும் மாதங்களில், தங்கம் விலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம்.

தங்கத்தின் இலக்கு

தங்கத்தின் இலக்கு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் அடுத்த இலக்கு 2,000 டாலர்கள் வரையில் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையில் அடுத்த 12 மாதங்களில் 10 கிராமுக்கு 52,000 - 53,000 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை 8,600 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் உச்சத்தில் இருந்து பலத்த வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது வார தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டாலும், பிற்பாதியில் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1794.20 டாலர்களாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1812.70 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வெள்ளிக்கிழமையன்று இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1772.40 டாலர்களையும் தொட்டது. முடிவில் சற்றே ஏற்றம் கண்டு 1784.85 டாலர்களாக முடிவடைந்தது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 24.395 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 24.695 டாலர் வரையில் சென்றது. வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 23.705 டாலர்கள் வரையில் சென்று, முடிவில் 23.968 டாலர்களாக முடிவுற்றது..

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடத்தில் ஏற்றம் கண்டாலும், வார இறுதியில் சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,900 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 48,299 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 47,635 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 47,635 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 65,770 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 66,430 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 64,035 ரூபாய் வரையில் சென்று, பின்னர், 64,534 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 13,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தவிர, மூன்று நாட்கள் சரிவிலும், இன்று மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,144 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,506 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் மூன்று நாட்கள் தவிர, மற்ற நாட்கள் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,280 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை மாற்றமில்லாமல் 49,160 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 689 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,900 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 70,300 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,900 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு சற்று குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் கவனித்து வாங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்தின் விலை மீடியம் டெர்மில் குறைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold prices expected to reach Rs.52,000 – 53,000 level in next 1 year

Gold price weekly update; gold prices expected to reach Rs.52,000 – 53,000 level in next 1 year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X