நிபுணர்கள் சொல்வதெல்லாம் பலித்துவிடுமோ.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்.. தங்கம் விலை குறையாதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.

கடந்த வாரம் முழுக்க தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இது இன்னும் ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இவ்வாறு பலத்த ஏற்றத்தினை கண்டு வந்துள்ள தங்கம் விலையானது, வரும் வாரத்திலும் குறையுமா? அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்கள் விலை என்ன? வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

நுகர்வோர் விலை குறியீடு

நுகர்வோர் விலை குறியீடு

தங்கம் விலை அளவு கடந்த வாரத்தில் பல மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடு குறித்தான குறியீடானது, பல மாதங்கள் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்ட நிலையில், இது பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நுகர்வோர் விலை விகிதமானது 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

நுகர்வோர் நம்பிக்கை

நுகர்வோர் நம்பிக்கை

அதேபோல நுகர்வோர் நம்பிக்கை குறித்தான விகிதமும் 2008க்கு பிறகு, கடந்த நவம்பர் மாதத்தில் குறைந்த அளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது பணவீக்கத்திற்கு முன்னதாக இந்த சரிவானது வந்துள்ளது. ஆக இது நுகர்வினைக் குறைக்கலாம். இது பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

இருப்பினும் தங்கத்தின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவர்கள் தங்கத்திற்கு டிஸ்கவுண்ட் விலையை கொடுத்து வந்த நிலையிலும் கூட தேவையானது சரிந்துள்ளது. எனினும் வரவிருக்கும் காலங்களில் முதலீட்டு ரீதியாக தங்கம் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்த அச்சம்

பணவீக்கம் குறித்த அச்சம்

மேலும் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இதுவும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அடுத்த 12 மாதங்களில், அதாவது ஒரு வருடத்தில் 10 கிராமுக்கு 52,000 - 53,000 ரூபாய்க்கு மேலாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உச்சத்தில் பங்கு சந்தைகள்

உச்சத்தில் பங்கு சந்தைகள்

இதற்கிடையில் நடப்பாண்டில் பங்குச்சந்தை உள்ளிட்ட முக்கிய முதலீடுகளும், இதுவரையில் பலமான ஏற்றத்தை கண்டுள்ளன. இது சந்தையில் உச்சத்தில் காணப்படும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம். இது மேற்கொண்டு வரும் மாதங்களில், தங்கம் விலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம்.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1820.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 1813.80 டாலர்களையும் தொட்டது. வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1871.35 டாலர்களை தொட்டது. முடிவில் 1867.85 டாலர்களாகவும் முடிவுற்றது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 24.285 டாலர்களாக தொடங்கிய நிலையில் புதன்கிழமையன்று குறைந்தபட்சமாக 24.040 டாலர்கள் வரையில் சென்று, வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 25.470 டாலர்களை தொட்டது. முடிவில் 25.413 டாலர்களாகவும் முடிவுற்றது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 48,000 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 47,815 ரூபாய் வரையில் சென்றது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 49,380 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 49,314 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 6,800 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 64,602 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 64,147 ரூபாய் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று, அதிகபட்சமாக 67,399 ரூபாயினை தொட்டது. முடிவில் 67,144 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தவிர, மூன்று நாட்கள் சரிவிலும், இன்று மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,144 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,506 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் மூன்று நாட்கள் தவிர, மற்ற நாட்கள் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,280 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை மாற்றமில்லாமல் 49,160 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 689 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,900 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 70,300 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,900 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு சற்று குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் கவனித்து வாங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold prices hit nearly multi month high, is it a right time to buy

Gold price weekly update; gold prices hit nearly multi month high, is it a right time to buy/ நிபுணர்கள் சொல்வதெல்லாம் பலித்துவிடுமோ.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்.. தங்கம் விலை குறையாதா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X