உச்சத்தில் தங்கம் விலை.. இனியாவது குறையுமா.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது சரிவினைக் கண்டிருந்தாலும், தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது.

 

தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், வரும் வாரத்தில் குறையுமா? அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன?

குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்கள் விலை என்ன? ஆபரண வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஒன்றன் பின் ஒன்றாக கமாடிட்டிகளின் விலையானது கொரோனவிற்கு பின்பு பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது விலை அதிகரிக்கும் பட்டியலில் தங்கமும் உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

இதுகுறித்து கோல்டுகார்ப் இன்க் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் டேவிட் கரோஃபாலோ மற்றும் ராப் மெக்வென் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், உலகில் தற்போது பணவீக்கமானது அதிகரித்து வரும் நிலையில், இது தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக அமையலாம் என்று கூறியுள்ளனர். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளிலும் இதனை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், இந்த பணவீக்கமானது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த டார்கெட்
 

அடுத்த டார்கெட்

தங்கத்தின் விலையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், நீண்ட கால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1800 டாலர்களாக உள்ள நிலையில், அடுத்த டார்கெட் 3,000 டாலர்களாக உள்ளது. இது நீண்டகால நோக்கில் 5000 டாலர்களாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை அல்லது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர்.

தங்க சுரங்கத்தில் பணவீக்கம்

தங்க சுரங்கத்தில் பணவீக்கம்

தங்கள் தொழிலில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களுக்கு உண்டான செலவு, மூலதன பற்றாக்குறை, அதிகரிக்கும் செலவுகள் உள்ளிட்ட பல காரணிகளினால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இது நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களுக்கு மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் அதிகரிக்கும் பணவீக்கமானது தங்கத்தின் விலையை ஊக்குவிக்கலாம் என்ற நிலையில், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை

உச்சத்தில் இருந்து ரூ.8,400-க்கு வீழ்ச்சி

உச்சத்தில் இருந்து ரூ.8,400-க்கு வீழ்ச்சி


தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது. குறிப்பாக உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை 8,400 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் உச்சத்தில் இருந்து பலத்த வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் விழாக்கால பருவம் மற்றும் திருமண விழாக்களினால், தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்பட்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று 1767.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 1760.30 டாலர்களாக தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1815.50 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் முடிவில் 1793.35 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 25 டாலர்களுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 23.380 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 23.035 டாலர்களாக தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 23.920 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். முடிவில் 24.390 டாலர்களாக முடிவுற்றது. மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே, இந்த வாரம் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடத்தில் இருந்தே ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 45,220 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 47,169 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 48,242 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 47,797 ரூபாயாக முடிவுற்றது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8400 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 59,531 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 62,804 ரூபாய் வரையில் சென்று திரும்பியது. வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 63,636 ரூபாயினை தொட்டு, பின்னர் 63,266 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 14,400 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் ஒரு நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களும் ஏற்றத்தில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,696 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 45167 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,128 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,400 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் ஒரு நாள் தவிர, மற்ற நாட்கள் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,680 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,260 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 69.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 699 ரூபாயாகவும், கிலோவுக்கு 69,900 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 67,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 69,900 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்து வாங்கலாம். நாளையின் சந்தையின் போக்கினையும் கண்கானித்து அதற்கேற்ப தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்தின் விலைக்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold prices may touch $3,000 an ounce in coming months

Gold prices continuously up in India.. Gold price weekly update; gold prices may touch $3,000 an ounce in coming months
Story first published: Sunday, October 24, 2021, 13:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X