சாமனியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல.. தொடர்ந்து உயரும் தங்கம்.. இனி குறையுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் முதல் 4 நாட்கள் பெரியளவில் மாற்றமின்றி ஒரு ரேன்ஜுக்குள்ளேயே வர்த்தகமாகியது. இது எந்த பக்கம் செல்லுமோ? விலை அடுத்து குறையுமா? குறையாதா? வரும் வாரத்தில் எப்படி இருக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளன.

 

கடந்த வாரத்தில் நிபுணர்கள் சொன்ன அத்தனை உச்ச விலைகளையும் உடைத்துக் காட்டியுள்ளதோடு, முடிவிலும் 1830.25 டாலர்களாக முடிவுற்றுள்ளது.

DiDi-ஐ கட்டம் கட்டி தூக்கும் சீன அரசு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் பிளான்..! DiDi-ஐ கட்டம் கட்டி தூக்கும் சீன அரசு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் பிளான்..!

இது சந்தைக்கு ஒரு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது அவுன்ஸூக்கு 1814 டாலர்களை உடைத்தால், அடுத்து நிச்சயம் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் சமீபத்திய அறிக்கையில் கணித்திருந்தனர். இந்த நிலையில் அதனையும் உடைத்துக் காட்டியுள்ளதோடு, கடந்த வார முடிவு விலையும் அதற்கு மேலாகவே முடிந்துள்ளது, இது வரும் வாரத்தில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்பதையே சுட்டிக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

நிபுணர்களின் கணிப்பினை போல மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், வரும் வாரத்தில் தொடக்கம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யலாம். எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே மிக அதிகம். இதற்கு பல சாதகமான காரணிகளும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன.

எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள்?

எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள்?

கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் குறைவது போல் காணப்பட்டாலும், கடைசி வர்த்தக நாளில் மீண்டும் உச்சம் தொட்டது. இதற்கிடையில் இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? கடந்த ஆண்டு உச்சத்தினை தொட்டு விடுமா? நிபுணர்களின் கணிப்பினை போல முக்கிய லெவல்களை உடைத்துக் காட்டியுள்ள நிலையில், இந்த வாரத்தில் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் பற்றிய கணிப்பு
 

பொருளாதாரம் பற்றிய கணிப்பு

முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினால் முடங்கிய பொருளாதாரம், தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ள உள்ள நிலையில், உருமாற்றம் அடைந்து பரவி வரும் மூன்றாம் கட்ட கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவும் நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்ற இறக்கம் அதிகம்

ஏற்ற இறக்கம் அதிகம்

சமீபத்திய மாதங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவுன்ஸூக்கு 2069 டாலர்களை தொட்டது. இதே மார்ச் 2021 அன்றும் 1680 டாலர்களையும் தொட்டது. மீடியம் டெர்மிலும் அதிக ஏற்ற இறக்கத்திலேயே இந்த விலை உயர்ந்த உலோகமானது காணப்படுகிறது. குறுகிய கால நோக்கில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணி

தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணி

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தினையே கண்டது. ஆக இவை இரண்டுமே நீண்டகால நோக்கில் நிலையாக ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் பணவீக்கம் பற்றிய அச்சம் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக ஷார்ட் டெர்ம் மற்றும் மீடியம் டெர்மில் வட்டி விகிதம், தங்கம் விலையில் பிரதிபலிக்கும் முக்கிய காராணியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது?

வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், மெதுவாக பத்திரம் வாங்குவது குறைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், வட்டி விகிதம் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் அப்படியே வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டாலும், இதனால் டாலரின் மதிப்பு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அதிகரிக்கலாம்

எப்போது அதிகரிக்கலாம்

2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலையானது இந்த ஆண்டின் முடிவுக்குள் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எப்படியிருப்பினும் தற்போது அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் என்பது சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது இன்னும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பதற்றம்

அரசியல் பதற்றம்

ஆப்கானில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அடுத்து என்னவாகுமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதற்கிடையில் பிடன் அரசு ஊக்கத்தொகை அறிவிப்புகளை அறிவித்தால்., அதுவும் தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

தங்கத்திற்கு சாதகமான காரணிகள்

பொருளாதாரத்திற்கு சாதகமான அறிகுறிகள் தொடர்ந்த வந்த வண்ணம் இருந்தாலும், பணவீக்கம் பற்றிய அச்சமும் எழுந்துள்ளது. அதோடு அதிகளவிலான பணவீக்கம் என்பதும் தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதெல்லாம் தங்கம் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினையே கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் இருந்தே பெரியளவில் மாற்றமின்றி, வார இறுதியில் பலமான ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1821.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்ச விலையாக 1803.40 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1836.90 டாலர்களை தொட்டது. முடிவில் 1830.25 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

தங்கம் கேண்டில் பேட்டர்ன்

தங்கம் கேண்டில் பேட்டர்ன்

தங்கம் விலையானது வார கேண்டில் தினசரி கேண்டில் என அனைத்தும் பையிங் பக்கம் திரும்பியுள்ளது. விலையும் தங்கத்தின் முக்கிய லெவல்களை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வரும் வாரத்திலும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பெற்றியளவில் மாற்றமின்றி இருந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான்று பெரும் ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 24.130 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று குறைந்தபட்சமாக 23.775 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 24.945 டாலர்கள் வரையிலும், முடிவில் 24.797 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. வார இறுதியில் மட்டும் 3.68% ஏற்றம் கண்டுள்ளது

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,438 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 46,776 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 47,598 ரூபாயினை தொட்ட நிலையில், முடிவில் 47,524 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இதே வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 64,085 ரூபாயாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று குறைந்தபட்சமாக 62,828 ரூபாயினை தொட்டு, மீண்டும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 65,605 ரூபாயாயினை தொட்டது. முடிவில் 65,209 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 12,400 ரூபாய்க்கும் மேல் குறைவாகவே காணப்படுகின்றது. ஆக வெள்ளியினை நீண்டகால நோக்கில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 2 நாள் மட்டும் ஏற்றத்திலும், மற்ற 4 நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. 1 நாட்கள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று சவரனுக்கு 35.904 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, 4,496 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. 4 நான்கு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,960 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,560 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 1.80 காசுகள் உயர்ந்து, 69.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 696 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,800 ரூபாய் அதிகரித்து, 69,600 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,400 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 69,600 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; gold to hedge against inflation, volatility and key factors to drive prices

Gold latest updates.. Gold price weekly update; gold to hedge against inflation, volatility and key factors to drive prices
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X