தள்ளுபடி விலையில் தங்கம்.. மாதத்தில் முதல் முறையாக சரியான ஆஃபர்.. இனி விலை குறையுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் போகிற போக்கில் உச்சத்தினை மீண்டும் தொட்டு விடுமோ? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? கடந்த ஆண்டு உச்சத்தினை தொட்டு விடுமோ? இப்படி எல்லாம் பேசும் அளவுக்கு கடந்த வாரத்தில் 1835 டாலர்களை தொட்டது.

நிபுணர்கள் சொன்னதை போல் கடந்த ஆண்டில் தொட்ட உச்சத்தினை போகிற போக்கில் உடைத்து விடுமோ? என்ற பல கேள்விகள் எழுந்தன.

15 நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.. என்னென்ன ஆவணங்கள் தேவை.. எப்படி பெறுவது..! 15 நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.. என்னென்ன ஆவணங்கள் தேவை.. எப்படி பெறுவது..!

ஆனால் கடந்த வாரத்தில் எதிர்பாராத விதமாக வார இறுதியில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டது. இது குறைந்த விலையில் வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி ஆபணரத் தங்கத்திலும் விழுந்துள்ளது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் முதல் முறையாக தங்கம் டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

ஏற்கனவே முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினால் முடங்கிய பொருளாதாரமே, இன்னும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், மூன்றாவது அலை என்ன செய்யப்போகிறதோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் பல மதிப்பீட்டு நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை குறைத்து வருகின்றன.

தடுப்பூசியால் பலன் இருக்குமா?

தடுப்பூசியால் பலன் இருக்குமா?

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவில் இருந்து, தடுப்பூசி மக்களை காப்பாற்ற எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும் இந்தியாவில் பல கோடி மக்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி என்பது தற்போதைக்கு நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆக அதற்கும் இன்னும் சில ஆகலாம் என்ற நிலையில், கொரோனா விரைவில் பரவலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

எப்படியிருப்பினும் தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பயம் இருந்தாலும், மக்கள் நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தினை பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும். எந்தளவுகு தங்கத்தின் தேவையானது உள்ளது என்று.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் வழக்கம்போல அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், வார இறுதியில் குறையத் தொடங்கியது. கடந்த திங்கட்கிழமையன்று 1808.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1791 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1835 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1812.60 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

டோஜி பேட்டர்ன்

டோஜி பேட்டர்ன்

கடந்த வியாழக்கிழமையன்று டோஜி பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், டோஜியின் குறைந்த விலையையும் உடைத்து காட்டியுள்ளது. ஆக இது வரும் வாரத்திலும் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் சரிவினையே கண்டது. வார தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 26.185 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 26.575 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.640 டாலர்களை தொட்டது. முடிவில் 25.707 டாலர்களையும் தொட்டது. வெள்ளியின் விலை நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,807 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 47,477 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 48,501 ரூபாயினை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று முடிவில் 48,053 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8100 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 69,000 ரூபாயாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 70,017 ரூபாயாகவே இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 68,082 ரூபாயினை தொட்டு, முடிவில் 68,319 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 9,300 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் சரிவிலும், மூன்று நாட்கள் ஏற்றத்திலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,056 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,541 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,200 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில் இது பெரியளவில் குறையுமா? என்ற சந்தேகத்தினையே நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. நான்கு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 49,170 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,540 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 732 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,200 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,800 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,200 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தற்போதைக்கு மீடியம் டெர்மில் பிசிகல் தங்கம் விலையானது டெக்னிக்கலாக சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். எனினும் இந்தியாவில் வரவிருக்கும் திருமண முகூர்த்தம், விழாக்கள் உள்ளிட்ட பலவும் ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் நிலவரம்

டாலர் நிலவரம்

அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற யூகத்திற்கு மத்தியில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விகிதம், பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் என அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இதனால் டாலரின் மதிப்பானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் சில யூகங்கள் தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் கூறி வருகின்றன.

டிஸ்கவுண்டில் தங்கம் விலை

டிஸ்கவுண்டில் தங்கம் விலை

தங்கம் விலை அதிகரிப்பானது மக்களை வாங்க யோசிக்க வைத்த நிலையில், தேவையானது குறைந்தது. இதனால் இந்தியாவில் விற்பனையாளார்கள் தள்ளுபடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிரீமியம் 1.5 டாலருடன் ஒப்பிடும்போது, நடப்பு வாரத்தில் அவுன்ஸூக்கு 5 டாலர்கள் வரையில் தள்ளுபடி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றது. இது இம்மாதத்தில் விற்பனையாளர்கள் தள்ளுபடியை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

உருமாற்றம் அடைந்த கொரோனா

உருமாற்றம் அடைந்த கொரோனா

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது நடப்பு மாதத்தில் பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது உருமாற்றம் அடைந்த கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளிலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தூண்டுகின்றது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் பொறுத்திருந்து வாங்குவது குறைந்த விலையில் வாங்க வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; Gold trade at a discount in India for first time in a month

Gold weekly updates.. Gold price weekly update; Gold trade at a discount in India for first time in a month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X