தங்கம் 54,000% லாபம்.. சுதந்திரம் பெற்ற 75 வருடங்களில் அபார ஏற்றம்.. வரும் வாரத்தில்..?

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். இந்த சுதந்திர தின நந்நாளில் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடாப்பட்டு வருகின்றது. இந்த நாளை இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றோம்.

இந்த சுதந்திரத்தினை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நல்ல நாளில் இந்திய முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

சுதந்திரம் பெற்ற ஆண்டில் இருந்து எவ்வளவு?

சுதந்திரம் பெற்ற ஆண்டில் இருந்து எவ்வளவு?

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்கு பிறகு தங்கமானது 54,000% அதிகமாக லாபத்தினை வாரிக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டது. இந்த கால கட்டத்தில் பாதுகாப்பு புகலிடமான தங்கமான பெரும் லாபத்தினை கொடுத்தது.

கடுமையான ஏற்றத்தில் தங்கம் விலை

கடுமையான ஏற்றத்தில் தங்கம் விலை

மாறாக இந்த காலகட்டத்தில் பங்கு சந்தைகள், பத்திர சந்தைகள் என பலவும் அபாயகரமான முதலீடாக பார்க்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் பாதுகாப்பு புகலிடமாக தங்கம் இருந்தது. குறிப்பாக கடந்த 2008க்கு பிறகு பொருளாதாரம் மந்த நிலையை கண்டது. இதன் காரணமாக தங்கம் விலையானது கடுமையான ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் ஒரு கவர்ச்சிகரமான முதலீடு

தங்கம் ஒரு கவர்ச்சிகரமான முதலீடு

இந்தியர்கள் மத்தியில் தங்கமானது விருப்பமான கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது. 1947ம் ஆண்டில் தங்கத்தின் சராசரியான விலையானது 10 கிராமுக்கு 88.62 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று அதன் விலையானது சுமார் 48,000 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு 54,000% லாபம் கொடுத்துள்ளது.

கடுமையான பொருளாதார மந்த நிலை

கடுமையான பொருளாதார மந்த நிலை

இந்தியர்கள் மத்தியில் தங்கமானது விருப்பமான கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது. 1947ம் ஆண்டில் தங்கத்தின் சராசரியான விலையானது 10 கிராமுக்கு 88.62 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று அதன் விலையானது சுமார் 48,000 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு 54,000% லாபம் கொடுத்துள்ளது.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலையானது கடந்த வார தொடக்கத்தில் மிக மோசமான சரிவினைக் கண்ட நிலையில், பிற்பாதியில் அதே அளவு ஏற்றத்தினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1765 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1677.90 டாலர்கள் வரையில் சென்று திரும்பியது. வெள்ளிக்கிழமையன்று வாரத்தின் அதிகபட்சமாக விலையான 1781.90 டாலர்கள் வரையில் சென்றது. எனினும் முடிவில் 1781.55 டாலர்களாக முடிவுற்றது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சரிவினைக் கண்ட நிலையில், பிற்பாதியில் ஏற்றத்தினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 24.340 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 24.380 டாலர்கள் வரையிலும், குறைந்தபட்சமாக 22.295 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 23.740 டாலர்கள் வரையில் சென்று, முடிவடைந்தது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,311 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 46,815 ரூபாயாக குறைந்தது, எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 46,996 ரூபாயினை தொட்டது. பின் முடிவில் 46,940 முடிவுற்றது.

தங்கம் விலை வீழ்ச்சி

தங்கம் விலை வீழ்ச்சி

எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9200 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 67,710 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 64,710 ரூபாயினை தொட்டது. வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 61,536 ரூபாயாக சரிந்த நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 63,238 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

வெள்ளி விலை வீழ்ச்சி

வெள்ளி விலை வீழ்ச்சி

எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 14,400 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வார தொடக்கத்தில் சரிவினைக் கண்ட நிலையில், பிற்பாதியில் அதிகரிக்க தொடங்கியது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,436 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,488 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று, 47,780 ரூபாயாக தொடங்கியது. இன்று அதன் விலை 48,390 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 682 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,200 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,200 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்துள்ளது.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது சாதகமாக வந்த நிலையில், அது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பொருளாதாரமானது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இது சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் அதிக ஏற்றத்தினை தடுக்கலாம்.

வட்டியில் மாற்றம் இருக்குமா?

வட்டியில் மாற்றம் இருக்குமா?

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது குறித்து முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முதலீட்டாளார்கள் கவனம்

முதலீட்டாளார்கள் கவனம்

இரண்டாம் கட்ட பரவல் என்பது குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூன்றாம் கட்ட பரவல் குறித்த அச்சம் இருந்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் விலையை இது ஆதரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் சில காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+