செம சரிவில் தங்கம் விலை.. அடுத்த டார்கெட் இது தான்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் உச்சத்தினை மீண்டும் தொட்டு விடுமோ? என்ற அச்சத்தினை ஏற்படுத்திய நிலையில், எதிர்பாராத விதமாக தங்கம் விலையானது 1800 டாலர்களையும் உடைத்துள்ளது. இது தற்போது 17630 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. .

ஆரம்பத்தில் தங்கம் விலையானது ஏற்றம் காணுவது போல இருந்தாலும், வாரத்தின் பிற்பாதியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

 வரலாற்று உச்சத்தை தொட்ட அன்னிய செலாவணி..! வரலாற்று உச்சத்தை தொட்ட அன்னிய செலாவணி..!

இந்த சரிவு இன்னும் இப்படியே தொடருமா? இந்த இடத்தில் வாங்கலாமா? இன்னும் குறையுமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையும்? அடுத்த டார்கெட் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? கடந்த வார நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது கடந்த வாரத்தில் சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், அது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்தது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பொருளாதாரமானது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் தற்போது மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இது சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

முக்கிய சப்போர்ட் லெவல் உடைப்பு

முக்கிய சப்போர்ட் லெவல் உடைப்பு

தங்கம் விலையானது அதன் முக்கிய சப்போர்ட் லெவலான 1800 டாலர்களை உடைத்துள்ள நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவாலன 1780 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. கடந்த வாரத்தில் 1759.50 டாலர்கள் வரையில் குறைந்தது. முடிவில் 1763.50 டாலர்களாக முடிவுற்றது. ஆக செண்டிமெண்டலாக தங்கம் விலையானது சற்று குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

ஜாப் டேட்டா

ஜாப் டேட்டா

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது வளர்ச்சி பாதையில் உள்ளதாக டேட்டா வெளியான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 2.31% குறைந்தது. இதே இந்திய சந்தையில் 2% குறைந்து, 46,616 ரூபாயாக முடிவுற்றது. அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 1750 டாலர்களாக உள்ளது.

வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா?

வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா?

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது குறித்த முக்கிய அறிவிப்பினை முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முதலீட்டாளார்கள் கவனம்

முதலீட்டாளார்கள் கவனம்

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவில் இருந்து, தடுப்பூசி மக்களை காப்பாற்ற எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. மேலும் இந்தியாவில் பல கோடி மக்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி என்பது தற்போதைக்கு நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

எப்படியிருப்பினும் தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது வெகுவாக குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூன்றாம் கட்ட பரவல் குறித்த அச்சம் இருந்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் விலையை இது ஆதரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் வழக்கம்போல அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1817 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே புதன்கிழமையன்று அதிகபட்சமாக விலையாக 1835.90 டாலர்கள் வரையில் சென்றது. வெள்ளிக்கிழமையன்று வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1759.50 டாலர்கள் வரையில் சென்றது. எனினும் முடிவில் 1763.50 டாலர்கள் வரையில் சென்றது.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தினை கண்ட நிலையில், பிற்பாதியில் பலத்த சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 25.625 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று அதிகபட்சமாக 25.655 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 24.205 டாலர்கள் வரையில் சென்று, முடிவில் 24.332 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 47,951 ரூபாயாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று அதிகபட்சமாக 48,358 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 46,556 ரூபாயாக சென்று, பின் முடிவில் 46,640 முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 67812 ரூபாயாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று அதிகபட்சமாக 48,358 ரூபாயினை தொட்டு, மீண்டும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 64,639 ரூபாயாக சரிந்த நிலையில், முடிவில் 65,000 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 12,700 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வார தொடக்கத்தில் இருந்து, ஒரு நாள் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் சரிவினையே கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 36,288 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,439 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து திங்கட்கிழமையன்று, 49,500 ரூபாயாக தொடங்கியது. இன்று அதன் விலை 48,430 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 70.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 702 ரூபாயாகவும், கிலோவுக்கு 70,200 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,100 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 70,200 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2900 ரூபாய் குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் சில காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price weekly update; XAU/USD may seen $1750 amid dollar strength

Gold prices will touch $1750 amid dollar strength
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X