தங்கம் கொடுக்க போகும் ஜாக்பாட்.. இதோ இரண்டாவது அலர்ட்.. கோர்வஸ் கோல்டு சொன்ன செம நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலையானது, வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் தற்போது தான் புல்லியன் மற்றும் தங்க சுரங்கத் துறையானது வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.

தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3,000 டாலர்களாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கோர்வஸ் கோல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பொன்டியஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பேங்க் ஆப் அமெரிக்கா தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3,000 டாலர்களை தொடும் என்று கூறிய நிலையில், தற்போது கோர்வஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரம்
 

வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரம்

ஏனெனில் சர்வதேச அளவில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களின் வளர்ச்சி இன்னும் மாறவில்லை. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையில் கோர்வஸ் நிறுவனம் 7 வருடத்தில் 1,47,000 அவுன்ஸ் தங்கம் மற்றும் 4,00,000 லட்சம் அவுன்ஸ் வெள்ளி உற்பத்தி செய்யலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும்

வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும்

பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு, பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி இன்னும் சில ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் ஏற்கனவே கூறியிருந்தது. இதன் காரணமாக வட்டி வருவாய் கொடுக்கும் முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தின் பக்கம் உள்ளனர்.

2வது சுற்று ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

2வது சுற்று ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் இரண்டாவது சுற்று ஊக்கத் தொகையானது மிக எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அது இன்னும் கால தாமதமாகலாம் என்ற நிலையே நீடித்து வருகின்றது. இதன் காரணமாக பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

வேலை வாய்ப்பு சந்தை
 

வேலை வாய்ப்பு சந்தை

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது தற்போது வரையில் மீண்டு வந்ததாக தெரியவில்லை. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு உயரும் பணவீக்கமானது தங்கத்திற்கு எதிர்மறையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

அடுத்து ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தடுப்பூசியானது சந்தைக்கு எப்போது வரும் என்ற பலமான எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கும் முதலீடாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

விலையை தூண்டும் தூண்டுகோல்கள்

விலையை தூண்டும் தூண்டுகோல்கள்

இதே தங்கம் விலையானது வட்டி விகிதங்கள் குறைவு, பொருளாதார தூண்டுதல் மற்றும் பொருளாதாரம் குறித்த நிச்சமயற்ற தன்மை மற்றும் வரவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் ஆகியவை தங்கம் விலையினை அதிகரிக்கும் தூண்டுகோல்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தினை எட்டிட்யுள்ளதோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதனால் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், இனியும் இது எந்த அளவுக்கு சரியுமோ என்ற பயத்தினையும் உருவாக்கியுள்ளது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

கோர்கரன் தங்கமானது இன்னும் ஏற்றம் காண இது ஒரு காரணமாக அமையும். இது டாலரில் அவுன்ஸூக்கு 5000 டாலர் வரை கூட செல்லக்கூடும்.

தங்கம் விலை இன்று அதிகரிக்காவிட்டாலும், சுரங்க நிறுவனங்கள் இன்னும் தலைகீழாக உள்ளன. ஏனெனில் அவை 2011ல் இருந்ததை விட 50 - 60% குறைவாக வேலை செய்யப்படுகின்றன. அதோடு மற்ற ஆய்வாளர்கள் தங்கத்தின் விலையானது நடுத்தர காலத்தில் அவுன்ஸூக்கு 3000 டாலர் மற்றும் 5000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேங்க் ஆஃப் அமெரிக்கா எதிர்பார்ப்பு

பேங்க் ஆஃப் அமெரிக்கா எதிர்பார்ப்பு

2021ம் ஆண்டிற்குள் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3000 டாலர்களை எட்டும் என்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் எதிர்பார்க்கின்றது. இதே சிட்டி குரூப் மற்றும் நியூயார்க்கினை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான எலக்ட்ரம் குழுமத்தின் நிறுவனர் தாமஸ் கபிலன் தங்கம் விலையானது 5,000 டாலரினை தொடலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்கும்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிக்கும்

அமெரிக்காவின் முதலீட்டு குருவான ஜிம் ரோஜெர்ஸ், தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும். நான் கடந்த 2019ம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ச்சியாக முதலீடுகளை செய்து வருகிறேன், இனியும் தொடர்ந்து இன்னும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்வேன் எனவும் கூறியது நினைவுகூறத்தக்கது.

இப்படி ஒவ்வொரு நிபுணர்களும் கூறுவது நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்பது தான். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price will soon touch new high; it may big jackpot for investors

Many of analysts said Gold prices are will touch new high in soon; it may big jackpot for investors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X