தங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை விண்னைத் தொடும் அளவுக்கு சென்றாலும், இன்றளவிலும், நகைக்கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் இருக்கிறது.

 

ஒரு புறம் இது மிக சிறந்த ஆபரணமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அந்த கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது எனலாம்.

ஏனெனில் ஆபரணத் தங்கமாக வாங்கி வைக்கும் போது, அதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என பல வகையில் நாம் அதிக தொகையினை கொடுக்க வேண்டியிருக்கும், பின் அதனை விற்கும் போதும் அதன் விலையினை குறைத்து தான் நம்மிடம் வாங்கிக் கொள்வார்கள்.

தங்கம் விருப்பமான முதலீடு

தங்கம் விருப்பமான முதலீடு

இதற்கிடையில் தான் பேப்பர் தங்கம் என அழைக்கப்படும் தங்க முதலீடுகள் மிக பரவலாக முதலீடு செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசின் கோல்டு இடிஎஃப், கமாடிட்டி சந்தையில் தங்கத்தில் முதலீடு, தங்கம் சார்ந்த ஃபண்டுகள் என பல வகையிலும் முதலீடு செய்யப்படுகின்றன. அதில் கமாடிட்டி சந்தையில் தங்கம் முதலீடு செய்யப்படுவது, மிக விருப்பமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

நீண்டகால முதலீட்டில் நல்ல லாபம்

நீண்டகால முதலீட்டில் நல்ல லாபம்

ஏனெனில் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது வாங்கி விற்றும் லாபம் பார்க்க முடியும். ஆனால் தங்கத்தினை பொறுத்த வரையில் நீண்டகால நோக்கில் ஏற்றத்தில் தான் இருக்கும் என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகிறதோ?. அப்போதெல்லாம் வாங்கலாம். அது நீண்டகால முதலீட்டில் நல்ல கொடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம்
 

தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம்

தங்கம் விலையானது கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டில் 19% ஏற்றத்துடனும், இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 40% ஏற்றத்துடனும் காணப்படுகிறது. இது அமெரிக்கா டாலர் பலவீனம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஆப்சன்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஆப்சன்

மேலும் தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது. அதோடு நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. முக்கியமாக கொரோனா வைரஸ் பரவல், சரிந்து வரும் பொருளாதாரம் என பல காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம்

பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம்

அமெரிக்கா சீனா பதற்றம், வட்டி விகிதம் குறைவாக இருத்தால், பத்திர சந்தை வீழ்ச்சி, மற்ற பங்கு சந்தை உள்ளிட்ட பல முதலீட்டு ஆப்சன்களும் வீழ்ச்சியில் இருக்கும் நிலையில், இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக எதிராகவும், பாதுகாப்பு புகலிடமாகவும் விளங்குவது தங்கம் தான். இதனால் நிபுணர்கள் தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

தங்கத்தின் அடுத்த டார்கெட்

தங்கத்தின் அடுத்த டார்கெட்

இந்த நிலையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இது நடுத்தர காலத்தில் காமெக்ஸ் சந்தையில் அவுன்ஸூக்கு 1840 - 1850 டாலர்கள் வரை செல்லலாம். இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 49,000 ரூபாய் வரையில் செல்லலாம். எனினும் தங்கம் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும். தங்கத்தின் அடுத்த டார்கெட் 2021ல் அவுன்ஸூக்கு 2,450 டாலர்கள் வரையில் செல்லலாம். இதே இந்திய மதிப்பில் 65,000 - 68,000 ரூபாய் வரை செல்லலாம் என்றும் கணித்துள்ளது.

தங்கம் இடிஎஃப்பும் நல்ல லாபம் கொடுக்கலாம்

தங்கம் இடிஎஃப்பும் நல்ல லாபம் கொடுக்கலாம்

தங்கம் விலையானது அதிகரிக்கும் பட்சத்தில் கோல்டு இடிஎஃப்பும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோல்டு இடிஎஃப்பும் நீண்டகால நோக்கில் நல்ல முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த நிதி மூலதனங்கள் பட்டியலிடப்பட்டு தேசிய பங்குச் சந்தையிலும்(NSE) மும்பை பங்குச் சந்தையிலும் (BSE), வர்த்தகம் செய்யப்படுகின்றன. தங்கத்தின் தேவை அதிகரிக்கும்போது, விலையும் அதிகரிக்கும். ஆக பாதுகாப்பான தங்க முதலீடுகளுக்கு கோல்டு இடிஎஃப் சிறந்த ஆப்சன் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price will touch Rs.65,000 to Rs.68,000 per 10 gram in next year

Gold prices will touch Rs.65,000 to Rs.68,000 per 10 gram in 2021. But medium term it may touch Rs.49,000.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X