ஏமாற்றம் தந்த தங்கம் விலை.. மீண்டும் வரலாற்று உச்சத்தினை நோக்கி ஏற்றம்.. இனி எப்போது தான் குறையும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாவ் பரவாயில்லேயே தங்கம் விலை குறைஞ்சிருக்கே என்று சற்றே ஆறுதல் அடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தினை நோக்கி படையெடுத்துள்ளது தங்கம் விலை.

டாலரின் மதிப்பானது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அது தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

போதாக்குறைக்கு இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது.

வலுவாக காணப்படும் ஸ்பாட் கோல்டு

வலுவாக காணப்படும் ஸ்பாட் கோல்டு

இவ்வாறு பல காரணங்களால் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. ஸ்பாட் கோல்டின் விலையும் கொஞ்சம் வலுவாகவே அவுன்ஸூக்கு 1958.99 டாலர்களாக உள்ளது. இதே ப்யூச்சர் கோல்டின் விலையானது 0.5% ஏற்றம் கண்டு 1953 டாலர்களாக உள்ளது. சர்வதேச சந்தையின் தங்கம் விலையானது நடப்பு மாதத்தில் மட்டும் 10% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த நான்கு வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

அமெரிக்க தேர்தல் தாமதமாகலாம்

அமெரிக்க தேர்தல் தாமதமாகலாம்

இதற்கிடையில் ஏற்கனவே இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு டாலரின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். இது இன்னும் டாலரின் மதிப்பு அழுத்தத்திற்கு வழிவகுத்தது. இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக உள்ளது.

இதுவும் ஒரு காரணம்
 

இதுவும் ஒரு காரணம்

எனினும் விலைமதிப்பற்ற உலோகங்களில் வெள்ளி அவுன்ஸூக்கு 0.7% சரிந்து 23.39 டாலராகவும், இதுவே பிளாட்டினம் 0.2% குறைந்து 901.27 டாலராகவும் இருந்தது. அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள், பலவீனமான டாலர் மதிப்பு, புதிய ஊக்குவிப்பு சலுகைகள் எதிர்பார்ப்பு, அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இன்னும் தங்கத்திற்கு ஆதரவாகத் தான் உள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்,

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

கடந்த வியாழக்கிழமையன்று இறங்கிய வேகத்தில் மீண்டும் இன்று தங்கம் விலை ஏறிக் கொண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 20.70 டாலர்கள் அதிகரித்து, 1963 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 1.07% ஏற்றமாகும். தொடர்ச்சியாக ஒரு நாள் வீழ்ச்சி கண்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் தற்போது 1.62% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 0.378 டாலர்கள் அதிகரித்து 23.740 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று தினங்களாகவே தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த வெள்ளி விலையானது, இன்று சற்று ஏற்றத்துடன் தொடங்கியிருந்தாலும், பெரியளவில் மாற்றம் காணவில்லை.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில், வியாழக்கிழமை சரிவை விட இருமடங்கு ஏற்றம் கண்டுள்ளது. தற்போது 392 ரூபாய் ஏற்றம் கண்டு, 53,530 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக 53,704 ரூபாய் வரையில் சென்று வர்த்தகமாகி, தற்போது சற்று குறைந்து காணப்பட்டாலும், மீண்டும் ஏற்றம் காணும் நிலையிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலையானது 3000 ரூபாய் சரிவுக்கு பிறகு, இன்று 1.59% ஏற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது 1001 ரூபாய் ஏற்றம் கண்ட வெள்ளி விலையானது, 63,671 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இனி வரும் வாரங்களில் நிச்சயம் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices again start to increase in Friday session

Gold price update.. Gold prices again start to increase in Friday session
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X