மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. இனி நினைக்க மட்டும் தான் முடியும் போல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கமாடிட்டி சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் உச்சத்தினை தொட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டது. இதற்கிடையில் இன்றும் இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகிறது.

 

நடப்பு காலாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்குவதற்கான திட்டத்தினை, ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, ரூபாய் மதிப்பு பலமான வீழ்ச்சியை பதிவு செய்தது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்தியா பயன்படுத்தும் தங்கத்தின் தேவையில் பெரும்பகுதியினை இறக்குமதி செய்கிறது. தற்போது தேவை அதிகரித்து வரும் நிலையில் இறக்குமதி இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றம் கண்டுள்ள தங்கம் விலை

ஏற்றம் கண்டுள்ள தங்கம் விலை

இந்தியாவில் தங்கத்தின் விலையானது 1 வருடத்தில் இல்லாத அளவு, கடந்த வாரத்தில் 44,100 ரூபாயினை தொட்டது. எனினும் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க பத்திர விளைச்சலில் சற்று மென்மையான நிலை, ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

முதலீட்டாளார்கள் கவனம்

முதலீட்டாளார்கள் கவனம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் டாலரின் மதிப்பு மற்றும் பத்திர லாபத்தினை உன்னிப்பாக கண்கானித்து வருகின்றனர். ஏனெனில் விலைமதிப்பற்ற உலோகம் அமெரிக்க டாலரால் பெரிதும் ஆதரிக்கப்படுவது. இது அதிகரித்தால் 1760 டாலர்களையும், இதே 1680 டாலர்களையும் ஆதரவாக கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது இந்த இரு லெவல்களுக்கும் இடையே காணப்படுகிறது. ஆக இந்த லெவல்களை உடைக்கும் பட்சத்தில் நல்ல மாற்றம் காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
 

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

தங்கம் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து 8% வீழ்ச்சி கண்டுள்ளது. இது அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு, பத்திர லாபம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் வீழ்ச்சி கண்டது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. மேலும் அதிகரித்து வரும் பத்திர லாபம், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளுக்கு வழிவகுத்துள்ளது.

குறைந்த விலையில் வாங்கலாம்

குறைந்த விலையில் வாங்கலாம்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும், என்றே முதலீட்டாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. எனினும் தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுவதால், இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆக தங்கத்தின் விலையானது மேற்கொண்டு குறைந்தாலும், குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றாலும், பல நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசியை விரைவில் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக ஒரு வேளை தடுப்பூசி வந்துவிட்டால், எளிதில் இந்த நெருக்கடியான நிலையினை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் தாக்கம் மேற்கொண்டு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிலையே இருந்து வருகிறது. இதனால் நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று தற்போது அவுன்ஸூக்கு 1 டாலர் குறைந்து 1,741.05 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக குறைந்துள்ளது. எனினும் நேற்றைய உச்சத்தினை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது 0.57% அதிகரித்து, 25.398 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்ச விலையினை விட அதிகரித்துள்ளது. மொத்தத்தில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. . தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 57 ரூபாய் அதிகரித்து, 46,419 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்ச விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளியின் விலையானது, தற்போது 166 ரூபாய் அதிகரித்து, 66,780 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices again start to rise in indian market

Gold update.. Gold prices fall for second day in a row
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X