கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது நேற்று சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக தடுமாற்றத்தில் காணப்பட்டது. எனினும் இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 1 வருட குறைந்த விலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஒரு வருட உச்சத்தில் காணப்படுகிறது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த சில அமர்வுகளாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இது மீண்டும் குறையுமா? சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

உச்சத்தில் இருந்து குறைவு

உச்சத்தில் இருந்து குறைவு

எப்படி இருப்பினும் தற்போதைய விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் கூட, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து 10 கிராம் விலை சுமார் 5000 ரூபாய் சரிவில் உள்ளது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 10,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

குறைந்த விலை

குறைந்த விலை

இது சர்வதேச அளவில் பொருளாதார மீட்சி, கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை, பத்திர லாபம் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தின. இதனால் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 44,100 ரூபாய் என்ற லெவலை தொட்டது. இது ஏப்ரல் 2020 முதல் ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலையாகும். ஆனால் இன்று

Array

Array

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 44,100 ரூபாயினை தொட்ட நிலையில், ரெசிஸ்டன்ஸ் லெவல் 46,150 ரூபாயாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலையானது 45,700 ரூபாய் முதல் 44,100 ரூபாய் வரையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது இரண்டு வார சரிவினைத் தொட்டது. அதோடு பத்திர லாபமும் சற்று சரிவினை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இன்று தங்கம் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. பத்திர லாபம் சரிய ஆரம்பித்துள்ள நிலையில், இது முதலீட்டாளர்களை ,மற்ற முதலீடுகளை நாடி செல்ல தூண்டியுள்ளது.

தடுமாறும் தங்கம் விலை

தடுமாறும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.45 டாலர் அதிகரித்து, 1731.10 டாலர்களாக காணப்படுகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் தங்கம் விலையானது தற்போது வரையில் நிபுணர்கள் கூறியதை போல, 1660 டாலர்களை உடைக்காமல் மேலேயே உள்ளது. அதேபோல் 1760 டாலர்களையும் உடைக்காமல் காணப்படுகிறது. எனினும் நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம்.

சற்றே ஏற்றத்தில் வெள்ளி விலை

சற்றே ஏற்றத்தில் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.59% அதிகரித்து, 24.927 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை ஏற்றம்

இந்திய சந்தையில் தங்கம் விலை ஏற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 45,501 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

கிடுகிடு ஏற்றத்தில் வெள்ளி விலை

கிடுகிடு ஏற்றத்தில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையினை போலவே, இந்திய சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 622 ரூபாய் அதிகரித்து, 66,036 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் கணவில்லை. இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4,257 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 34,056 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4645 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 37,160 ரூபாயாகவும் காணப்படுகிறது. நேற்று சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது மாற்றமின்றி காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 69.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 69,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த 5 தினங்களில், இரண்டு நாட்கள் சரிவிலும், 2 நாட்கள் அதிகரித்தும், ஒரு நாள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் தற்போது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் 1760 டாடலர்களை உடைத்து சென்றால் வாங்கலாம். ஏனெனில் கடந்த சில வாரங்களாக விலையினை உடைக்காமல் தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices again start to trade high in MCX and comex

Gold price update.. Gold prices again start to trade high in MCX and comex
Story first published: Tuesday, April 6, 2021, 15:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X