பட்டையை கிளப்பும் தங்கம் விலை.. இனி எங்கே போய் முடியுமோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது மீண்டும் தொடர்ந்து றெக்கை இல்லாமல் பறந்து வருகின்றது. இனி இது குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் இப்படியே அதிகரிக்கும். நிபுணர்களின் கணிப்பினை போல மீண்டும் உச்சத்தினை தொட்டு விடுமோ? என்ற பல கேள்விகள் தான் எழுந்துள்ளன.

ஏனெனில் சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் தங்கம் விலையானது, மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

குட் நியூஸ்: 2 மாத சரிவில் இருந்து மீண்ட ரூபாய் மதிப்பு..! குட் நியூஸ்: 2 மாத சரிவில் இருந்து மீண்ட ரூபாய் மதிப்பு..!

நிபுணர்களின் மீடியம் டெர்ம் இலக்குகளை எல்லாம் தாண்டி வர்த்தகமாக ஆரம்பித்துள்ளது. இனி தங்கம் விலை குறையுமா? அப்படியே குறைந்தாலும் எவ்வளவு குறையும்? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை என்ன? வெள்ளி விலை என்ன? ஆபரண தங்கத்தின் விலை என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் இரண்டாவது நாளான இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 6.25 டாலர்கள் அதிகரித்து, 1904.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Comex வெள்ளி விலை நிலவரம்

Comex வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.70% அதிகரித்து, 28.247 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலை சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 48,957 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. ஜூன் 4 அன்று நடப்பு காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் அடுத்த காண்டிராக்டில் வாங்கலாம்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 255 ரூபாய் அதிகரித்து, 72,401 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், தற்போது கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 4,650 ரூபாயாகவும், சவரனுக்கு 37,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரணத் தங்கம் விலை தொடர்ச்சியாக இன்றோடு 5 நாட்களாக அதிகரித்து வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 5,070 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,560 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக 5 நாட்களாகவே ஏற்றம் கண்டே வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 1.10 ரூபாய் அதிகரித்து, 77.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 1,100 ரூபாய் அதிகரித்து, 77,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த சில அமர்வுகளாக சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

பணவீக்கம் பற்றிய கவலைகள், அமெரிக்காவின் பத்திர லாபம், அமெரிக்க டாலரின் மதிப்பு, கொரோனா வைரஸ் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

தேவை பாதிப்பு

தேவை பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்திருந்தாலும், இது இன்னும் முழுமையாக மீள்ச்சியடையவில்லை. அதோடு பல மாநிலங்களில் கொரோனா லாக்டவுன் காரணமாக நகைகடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தங்கத்தின் தேவையும் பாதித்துள்ளது. எனினும் முதலீட்டு தேவையானது சற்றே அதிகரித்துள்ளதால், தங்கம் விலையானது குறையாமல் உள்ளது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

டாலரின் மதிப்பு சரிவு காரணமாக, தங்கத்தின் முக்கிய லெவலாக கருத்தப்பட்ட 1900 டாலர் என்ற லெவலையும் தற்போது உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கம் விலையை குறைந்ததாக காட்டும் நிலையில், இதுவும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பு கிட்டதட்ட 4 மாத குறைவான 89.605 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது. தங்கம் விலையானது தொடர்ந்து 1890 டாலர்களுக்கு மேலேயே தொடர்ந்து இருந்தால், அது மீண்டும் ஏற்றம் காணும் விதமாகவே உள்ளது. இதன் அடுத்த உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 1925 டாலர்களாகும். ஒரு வேளை குறைந்தால் 1810 டாலர்கள் வரையில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே எம்சிஎக்ஸ் தங்கத்தின் சப்போர்ட் லெவல் 47,900 ரூபாயாகும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,400 ரூபாயாகும்.

கிரிபோடோகரன்சிகள்

கிரிபோடோகரன்சிகள்

சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில், கிரிப்டோ கரன்சி மதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது பிட்காயின் மதிப்பானது 40,000 டாலர்கள் என்ற லெவலில் உள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையின் அதிக ஏற்றத்தினை இது தடுக்கலாம். எப்படியிருப்பினும் இனி வரும் நாட்களில் கொரோனா தாக்கம், வரவிருக்கும் டேட்டாக்களை பொறுத்து சந்தையானது வர்த்தகமாகலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices again starting to rise, silver also jumping

Gold price latest updates.. Gold prices again starting to rise, silver also jumping
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X