தங்கம் விலையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சர்வதேச சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது மேற்கொண்டு இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துமா? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் எப்படி இருக்கிறது. இது இன்றும் குறையுமா? இது தங்க ஆர்வலர்களுக்கும், சாமானியர்களுக்கும் சரியான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலையானது முந்தைய சில அமர்வுகளாக அழுத்தத்தில் காணப்பட்டாலும், கடந்த அமர்வில் மீண்டும் உச்சம் தொட்டது. அதோடு நிபுணர்களின் கணிப்பினை போல, 1900 உடைக்காமல் தொடர்ந்து மேலே ஏற்றம் கண்டு கொண்டுள்ளது.
விலை அதிகரிக்கலாம்
ஆக இதை தொடர்ந்து புதிய உச்சத்தினையே எட்டி வருகின்றதே, இந்த இடத்தில் வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்தில் தற்போது முதலீடு செய்யலாமா? வேண்டாமா? இது மேற்கொண்டு ஏற்றம் காணுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்திய நிபுணர்கள் தொடங்கி சர்வதேச நிபுணர்கள் வரையில், தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே கூறி வருகின்றனர்.
வீழ்ச்சியின் பிடியில் சில நாடுகள்
பல வளர்ந்த நாடுகளும் தற்போது வீழ்ச்சியின் பிடியில் உள்ளன. குறிப்பாக சில நாடுகள் ரெசசனுக்குள் நுழையலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை கட்டுபடுத்த பணி நீக்க நட்வடிக்கையினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எதிர்பார்ப்பு இது தான்
எனினும் தற்போது பணவீக்கம் என்பது குறைந்து வரும் சூழலில், வட்டி அதிகரிப்பானது மெதுவாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டி விகிதமும் மெதுவாக படிப்படியாக அதிகரிப்பது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 2023 - 2024ம் ஆண்டில் ஆரம்பத்தில் மாற்றமில்லாமல் தொடங்கி, நடுத்தர காலத்தில் குறைந்து, மீண்டும் வருட பிற்பாதியில் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பிரச்சனைகள் இன்னும் முடியவில்லை
இன்று வரையில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என்பது முடிந்த பாடாக இல்லை. இது எப்போது முடிவுக்கு வரும் என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. பல நாடுகளும் தங்களது மத்திய வங்கிகளில் தங்கத்தின் இருப்பினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
ஒரு காலகட்டத்தில் தங்கத்திற்கு மாற்றாக கிரிப்டோகரன்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிரிப்டோக்களும் அமைதியாகி விட்டன. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம்.
இதனையும் தெரிஞ்சுக்கோங்க
எனினும் தங்கத்தினை ஒரு அசெட்டாக வைக்க முடியாது. ஏனெனில் இதன் மதிப்பு சப்ளை தேவையை பொறுத்து மாறுபடும். அரசியல் பதற்றங்கள் தாக்கத்தினை ஏற்படுத்தும். சர்வதேச பொருளாதாரத்தின் தாக்கம் இருக்கும். ஆக இதில் அதிக ஏற்ற இறக்கம் என்பது இருக்கும். திடீரென விலை ஏறும், விலை குறையும். ஆக இதனையும் மனதில் வைத்துக் கொண்டு வணிகம் செய்வது நல்லது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3 டாலர்கள் அதிகரித்து, 1926.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே, வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து, 23.957 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 119 ரூபாய் அதிகரித்து, 56,665 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 326 ரூபாய் அதிகரித்து, 68,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கி வைக்கலாம்.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 5325 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 42,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலையானது, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 5809 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் அதிகரித்து, 58,090 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 74.50 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 74,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!



Click it and Unblock the Notifications