இன்றைய நாளில் எந்த செய்திகள் வருகிறதோ இல்லையோ? தங்கம் பற்றிய செய்திகள் அனுதினமும் வந்து கொண்டு இருக்கிறது. ஏனெனில் அந்தளவுக்கு அனுதினமும் ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது.
அது சர்வதேச சந்தையாக இருந்தாலும் சரி, இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகமாக இருந்தாலும் சரி, தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் கண்டு வருகின்றது.
இதன் எதிரொலியாக ஆபரண தங்கத்தின் விலையும் அனுதினமும் புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது. இதனால் இனி சாமானியர்களின் தங்கம் வாங்கும் கனவு பலிக்குமா? அல்லது கனவு கனவாகவே போய்விடுமா? தெரியவில்லை.
தங்கத்தின் அடுத்த டார்கெட்
தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அவுன்ஸூக்கு 3000 டாலரினை தொடலாம் என்றாலும், உடனடியாக 2,100 என்பது அடுத்த டார்கெட் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வருட முடிவிற்குள் 3,000 டாலரினை தொடலாம் என்றும் கூறுகின்றனர். இது உலகம் முழுவதும் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பயத்திலேயே முதலீட்டாளர்கள், தங்கத்தின் பக்கம் திரும்பி வருவதால் ஏற்றம் கண்டு வருகின்றது.
அடுத்த லாஜிக்கல் டார்கெட்
கடந்த வாரத்தில் கிட்டதட்ட 2080 டாலரினை தொட்ட தங்கம் விலையானது, இன்னும் விலை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் தொடர்ந்து கணித்து வருகின்றனர். இந்த நிலையில் காளைகளின் அடுத்த இலக்கு 2,100 - 2150 டாலர்களாக இருக்கும் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு வளர்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய அமர்வில் விலை
முந்தைய அமர்வின் போது தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் விலையானது 1,000 ரூபாய் குறைந்த பிறகு, இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 1,600 ரூபாய் குறைந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
என்ன காரணம்
அமெரிக்கா சீனா இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனா தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதில் தொடர்ந்து அமெரிக்காவே உச்சத்தில் உள்ளது. ஒரு வல்லரசு நாடான அமெரிக்காவே இந்த தொற்று நோயினால் இந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பய உணர்வும் அதிகரித்து காணப்படுகிறது.
தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு
மேற்கண்ட பல காரணங்களினால் அமெரிக்கா டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாக தங்கத்தில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாகவும் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றது. எனினும் இதில் சற்று ஆறுதல் தரும் விஷயம் என்னவெனில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், வேலையில்லாதோர் நலனுக்காக கொடுக்கப்படும் ஊக்கத் தொகையில் கையெழுத்திட்டார்.
டாலரின் சரிவு
அதுமட்டும் அல்ல சீனாவின் மிக பிரபலமான டிக் டாக் மற்றும் வீசாட் தடையிலும் கையெழுத்திட்டுள்ளாதாகவும், இது செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை இன்னும் இன்று ஊக்கப்படுத்தும் விதமாக டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் இன்றும் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 10.60 டாலர்கள் குறைந்து, 2,028.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே கடந்த அமர்வில் தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது 0.53% ஏற்றமாகும்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது தற்போது 2.31% ஏற்றம் கண்டுள்ளது. இது 0.637 டாலர்கள் அதிகரித்து 28.177 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. சமீப காலமாகவே தங்கம் விலைக்கு நிகராக வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.
இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்திலும் ஏற்றம் கண்டு வருகிறது. இது தற்போது 10 கிராமுக்கு 106 ரூபாய் அதிகரித்து, 54,895 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறதுல். இது 0.18% ஏற்றமாகும்.
எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்திலும் ஏற்றம் கண்டு வருகிறது. இது தற்போது கிலோவுக்கு 540 ரூபாய் அதிகரித்து, 74,700 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம், வெள்ளி விலையானது இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ? எனினும் விலையிறக்கம் காண்பதற்கு என்று எந்தவித காரணமும் இல்லையே.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications