Gold price update: தங்கம் விலையானது 10 கிராமுக்கு கடந்த ஜனவரி 13, 2023ல் 56,370 ரூபாயாக முந்தைய உச்சத்தினை உடைத்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று 56,850 ரூபாயாக உச்சத்தினை எட்டியது. இது வரவிருக்கும் வாரத்தில் மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல நிபுணர்களும் வாங்கலாம் என்றே கணித்து வருகின்றனர்.
கமாடிட்டி நிபுணர்கள் , அமெரிக்க டாலரின் மதிப்பானது 7 மாத சரிவில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகின்றது.
பாதுகாப்பு புகலிடம்
இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது மேற்கொண்டு 55,000 ரூபாயினை தாண்டியுள்ளது. இது மீடியம் டெர்மில் 57,500 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் வரவிருக்கும் வாரத்தில் டாலர் மதிப்பானது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இதே டாலரின் மதிப்பானது 101 என்ற லெவலில் உள்ளது.
வட்டி அதிகரிப்பு இருக்கலாம்
சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி குறித்தான தரவு 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதே வீடு விற்பனை குறித்தான தரவு கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவில் உள்ளதையே காட்டுகின்றது.
அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள், பணவீக்கம் குறைந்தாலும் வட்டி விகிதம் நீண்ட காலத்திற்கு உச்சத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். இது நடப்பு ஆண்டில் மெதுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் அழுத்தம் இருக்கலாம்
வரவிருக்கும் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையானது 1885 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1950 - 2000 டாலராகவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜிடிபி கணிப்பு
வரும் வாரத்தில் ஜிடிபி குறித்தான கணிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி பொருளாதார நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
சீனாவின் தேவை
சீனாவில் அதிகரிக்கும் தேவையானது தங்கத்தினை தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை அதிகரிக்கலாம்.
தங்கத்திற்கு ஆதரவு
நடப்பு ஆண்டில் தங்கத்தில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றாலும், மொத்தத்தில் தங்கம் விலையானது 2023ல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் பல்வேறு பொருளாதார நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை மத்திய வங்கிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
கிரிப்டோகரன்சிகள்
தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள், பெரியளவில் கைகொடுக்காத நிலையில், நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பபவர்களுக்கு இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications