தங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..!

குழந்தைகள் முதல் பெரியோர் வரை இன்று விரும்பி அணியப்படும் ஒரு ஆபரணமாக அணியப்படுவது தங்கம் தான். ஆனால் இன்று போகிற போக்கை பார்த்தால் இனி கனவிலும் கூட வாங்க முடியாது போல.

அந்தளவுக்கு தொடர்ந்து ஒவ்வொரு தினமும் தங்கம் விலையானது உச்சம் கண்டு வருகிறது. ஒரு புறம் கொரோனாவின் காரணமாக பலம் கடைகள் மூடப்பட்டுள்ள போதிலும், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதோடு தற்போது கொரோனாவினால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, நகைக்கடைகள் காற்று வாங்கிக் கொண்டுள்ளன.

தேவை குறைவு

தேவை குறைவு

ஒரு புறம் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ள போதிலும் கூட, மறுபுறம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அதோடு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் தேவையும் படு வீழ்ச்சி கண்டு வருகிறது. நிலவி வரும் நெருக்கடியான நிலையினால் பணப்புழக்க விகிதமும் குறைவாகவே உள்ளது.

தங்கத்தில் அதிகரித்து வரும் முதலீடு

தங்கத்தில் அதிகரித்து வரும் முதலீடு

அதோடு தற்போதுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்காகவும் செலவு செய்ய தயாராக இல்லை. ஆக தங்கத்தின் விற்பனையானது வெகுவாகவே குறைந்துள்ளது. ஆனாலும் உலகளவில் நிலவி வரும் பொருளாதார சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தில் செய்து வருகின்றனர். இது தங்கம் விலை மேலும் சரிய காரணமாக அமைந்துள்ளன.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை

மேலும் உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவின் காரணமாகவும், வீழ்ச்சி கண்டு வரும் டாலர் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு சர்வதேச அளவில் நிலவி பதற்றம் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

இதன் காரணமாக நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 18 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. பொருளாதார மீட்சி மற்றும் பலவீனமான டாலர் என்பது, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் எழுச்சி பெறலாம். இது மேலை நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் இன்னும் ஆர்வம் காட்டக் கூடும். இதனால் தங்கம் விலையானது இன்னும் கூடுதலாக அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையிலும் அதிகரிக்கும்

எம்சிஎக்ஸ் சந்தையிலும் அதிகரிக்கும்

தங்கம் விலையானது 2011க்கு பிறகு தங்கம் விலையானது 1800 டாலரினை தொட்டுள்ளது. இந்த விலையானது இன்னும் ஏற்றம் என்ற நிலையிலும் ஆசிய சந்தையிலும் இதன் விலையானது எதிரொலிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்ககூடும்.

இனி எப்படி இருக்கும்?

இனி எப்படி இருக்கும்?

எப்படி எனினும் சில்லறை வர்த்தக கடைகளில் முடக்கமானது, தங்கத்தின் விலையில் எதிரொலிக்கக்கூடும். இது சந்தையில் மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கும்.

எனினும் சந்தையில் பொருளாதார மீட்சி அதிகரித்தால் மட்டுமே தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+