பொங்கல் நாளில் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா.. கூடிருக்கா குறைஞ்சிருக்கா?

தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று எட்டு மாத உச்சத்தினை எட்டியது. இது முக்கிய லெவலான 1900 டாலர்களையும் உடைத்து காட்டியுள்ளது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது முந்தைய வரலாற்று உச்சமான 10 கிராமுக்கு 56,191 ரூபாயினை உடைத்துக் காட்டியுள்ளது. இதே வார இறுதியில் முடிவில் 56,324 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் வார கேண்டில் மற்றும் தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

தொடர்ந்து பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? அப்படியே அதிகரித்தாலும் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது 102 என்ற லெவலில் காணப்படுகிறது. தொடர்ந்து ஆறாவது மாதமாக பணவீக்கத்தின் மதிப்பானது குறைந்து வருகின்றது. இது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

கடந்த ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 9.1% ஆக இருந்தது. இதற்கிடையில் பங்கு சந்தைகள் சரிவில் காணப்பட்டது. இதற்கிடையில் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது வரவிருக்கும் கூட்டத்திலும் மெதுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாலரின் மதிப்பானது இந்த வாரம் 1.67% சரிவில் காணப்படுகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளன

முக்கிய தரவுகள் வெளியாகவுள்ளன

வரவிருக்கும் வாரத்தில் அமெரிக்காவின் சில்லறை விற்பனை, பணவீக்க விகிதம், வீடு விற்பனை குறித்தான தரவு, நிறுவனங்களின் வருவாய் குறித்தான தரவுகள், பல கார்ப்பரேட் நிகழ்வுகள் பலவும் வரவுள்ளன. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பல நாடுகளின் பணவீக்கம்

பல நாடுகளின் பணவீக்கம்

குறிப்பாக பிரிட்டன், இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே என பல நாடுகளின் பணவீக்கம் தரவான வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ளது. இதுவும் தங்கம் விலையில் வரவிருக்கும் பிரதிபலிக்கலாம்.

ஜிடிபி

ஜிடிபி

வரவிருக்கும் நாட்களில் மேற்கண்ட தரவுகள் தவிர, சில நாடுகளின் 4வது காலாண்டு முடிவுகள், தொழில்துறை உற்பத்தி, சில்லறை விற்பனை குறித்தான தரவு என பலவும் வெளியாகியுள்ளன. இதுவும் தங்கம் விலையினை வரவிருகுக்கும் நாட்களில் வெளியாகவுள்ளது. இதனை தங்கம் விலையானது மீடியம் டெர்மில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தங்கம் அவுட்லுக்

தங்கம் அவுட்லுக்

தங்கத்தின் அவுட்லுக் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த வார இறுதியில் 1900 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் வரவிருக்கும் அமர்வில் 192 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு 1950 /196 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் ஏற்கனவே புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் சப்போர்ட் லெவல் 56,000 ரூபாய் மற்றும் 55,800 ரூபாயாக கணித்துள்ளது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று மாற்றமின்றி கிராமுக்கு 5297 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,376 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5778 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 57,780 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சரிவில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 74 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+