தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் வருட உச்சத்திலிருந்து ரூ.2,000.. இனி எப்படி இருக்கும்..!

இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதான ஆசை என்பது மட்டும் அல்ல, இது இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் தங்களை உயர்த்திக் காட்டும் ஒரு விளம்பர பலகை என்றே கூறலாம்.

அதிலும் சில பெண்கள் பொது இடங்களில் கழுத்து நிறைய அணிந்து வருவதை நாம் கண்கூட பார்க்க முடிகிறது. அந்தளவும் தீரா ஆசை தங்கத்தின் மேல்.

இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தங்கத்தின் மீது ஆசைப்படா பெண்களை காண்பது மிக அரிதே. இந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை ஃப்யூச்சர் வர்த்தகத்தில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

அதிலும் மிகுந்த படிப்பறிவு உள்ள பெண்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான பல வழிகள் தெரியலாம். ஆனால் அவர்களின் முதல் உரிமை தங்கத்திற்கு தான் உண்டு. சராசரி படிப்பறிவு உள்ள பெண்களுக்கு சேமிப்பு, வருங்காலத்திற்கான முதலீடு என்றால் அது தங்கம் மட்டுமே. இதற்கென தனியாக ஆவணங்கள் தேவையில்லை. நம் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு தங்கம் போன்று தன்னம்பிக்கை தருவது வேறெதுவுமில்லை என்று கூறலாம்.

கமாடிட்டியில் முதலீடு

கமாடிட்டியில் முதலீடு

சிலர் தங்கள் முதலீடுகளை ஆபரண தங்கமாக வாங்கி வைப்பார்கள். ஆனால் தற்போது தான் இந்த நிலைமை மாறத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். தற்போது பேப்பர் தங்கத்திலும் முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம் செய்கூலி அதிகரிப்பு, வரி விதிப்பு, ஜிஎஸ்டி வரி அதிகம். இதனால் தங்கத்தில் முதலீடு எம்சிஎக்ஸில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் நிமிடத்துக்கு நிமிடம் தங்கத்தின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது முதலீடு செய்யப்படுகிறது. மேலும் இங்கு முதலீடுகள் அதிகளவில் தேவைப்படுவது இல்லை என்பது தான் இதற்கு முதல் காரணம்.

தங்கம் விலை வீழ்ச்சி

தங்கம் விலை வீழ்ச்சி

கடந்த செப்டம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் நிலவி வந்த வர்த்தக போர் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலையானது கிட்டதட்ட 40,000 ரூபாயை தொட்டது. இந்த நிலையில் இந்த உச்சத்திலிருந்து தங்கத்தின் விலையானது சுமார் 2,000 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், உச்சத்திலிருந்து சுமார் 2000 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் தற்போது 38,180 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் கடந்த 11 தினங்களாகவே, அவ்வப்போது இறக்கம் கண்டாலும், தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அவுன்ஸூக்கு 1,487.50 டாலராக வர்த்தகமாகி வருகிறது. சமீபத்திய நாட்களில் தங்கத்தின் விலையானது லாபங்களுக்கும், இழப்புகளுக்கும் இடையில் உள்ளது. ஏனெனில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் விரைவில் ஒரு சுமூகமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது.

முதலீட்டாளர்கள் காத்திருக்கிறார்கள்

முதலீட்டாளர்கள் காத்திருக்கிறார்கள்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரைவில் வர்த்தக ஓப்பந்தம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதலீட்டாளர் இது குறித்தான சாதகமான கருத்து குறித்து காத்துக் கொண்டுள்ளனர். இதனால் பெரிய அளவிலான முதலீடுகள் காத்திருக்கின்றன என்றும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இந்த சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டால் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும்.

இந்தியாவில் ஆதாயம்

இந்தியாவில் ஆதாயம்

இந்தியாவில் தங்கத்தின் விலையானது இந்த ஆண்டில் வலுவான ஆதாயத்தை தந்துள்ளது. இது உலகளாவிய விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் இறக்குமதி வரி அதிகரிப்பு வரியை பொறுத்து விலை அதிகரிக்கலாம். தங்கம் விலை 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் தொட்ட 40,000 ரூபாயிலிருந்து தற்போது சுமார் 2,000 ரூபாயும் குறைந்துள்ளது.

இந்தியாவில் ஆபரண தங்கம்

இந்தியாவில் ஆபரண தங்கம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகரிப்பு ஒரு காரணம். எனினும் அதே சமயம் தேவை அதிகம். அதிலும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அதற்கடுத்தாற்போல் வரவிருக்கும் பொங்கல், நடப்பு ஆண்டில் பரவலாக பெய்த பருவமழையால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கத்தின் விலை அவ்வளவாக குறைய வாய்ப்பில்லை என்பதே உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+