7வது நாளாக சரிவில் தங்கம் விலை.. உச்சத்திலிருந்து ரூ10,000 சரிவு.. இது ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை தொடர்ச்சியாக கடந்த ஏழு வர்த்தக அமர்வுகளாக, தொடர்ந்து இந்திய சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது. இது உண்மையில் சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பாக அமையும்.

 

பொதுவாக தங்கத்தினை ஆபரணமாக வாங்கி வைத்த காலம்போய், இன்று மக்கள் டிஜிட்டல் தங்களாக வாங்கி விற்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்த வரையில் வாங்கும்போதும் லாபம், விற்கும் போதும் லாபம் என்பதால், மக்களின் ஆர்வம் இதில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

தினமும் ரூ.22 கோடி நன்கொடை.. டிவிட்டரில் கொண்டாடப்படும் விப்ரோ அசிம் பிரேம்ஜி..!

எனினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வாருங்கள் இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

வாருங்கள் இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இனி எப்படி இருக்கும்? தங்கம் விலை குறையுமா? அதிகரிக்குமா? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம் என்ன? வெள்ளி விலை எப்படியுள்ளது. மீடியம் டெர்மில் எப்படி இருக்கும். நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தடுமாறும் சர்வதேச தங்கம் விலை

தடுமாறும் சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது. அதிலும் தற்போது பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.45 டாலர்கள் குறைந்து, 1766.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விதமாக உள்ளது. எனினும் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளதால், சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் திங்கட்கிழமையன்று தொடக்கத்தினை பொறுத்து இது மாறலாம். ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. வழக்கம்போல நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கலாம்.

சர்வதேச சந்தையில் தடுமாறும் வெள்ளி விலை
 

சர்வதேச சந்தையில் தடுமாறும் வெள்ளி விலை

தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 0.20% குறைந்து, 26.000 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தினசரி கேண்டில் பேட்டர்னில் நேற்றைய முடிவு விலையை விட சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளதால், சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் 7வது நாளாக சரிவில் தங்கம் விலை

இந்திய சந்தையில் 7வது நாளாக சரிவில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் 7வது நாளாக சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 26 ரூபாய் குறைந்து, 46,700 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் சற்று சரியும் விதமாகவே காணப்படுவதால், சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. அதோடு இன்று வார இறுதி நாள் என்பதால், வர்த்தகர்கள் தங்களது கையில் ஆர்டர்களை புராபிட் புக்கிங் செய்ய நினைக்கலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது கடந்த ஏழு அமர்வுகளில் ஒரு நாள் மட்டும் சற்று ஏற்றம் கண்ட நிலையில், மற்ற ஆறு நாட்கள் சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 278 ரூபாய் குறைந்து, 68,359 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று குறைந்து தான் தொடங்கியுள்ளது. இதனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு மே காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், வர்த்தகர்கள் தங்களது ஆர்டர்களை ஜூலை காண்டிராக்டிக்கு ரோல் ஒவர் செய்யலாம். ஆக வெள்ளி விலையும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக குறையும் ஆபரண தங்கம் விலை

தொடர்ச்சியாக குறையும் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்றோடு, தொடர்ச்சியாக எட்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 4,405 ரூபாயாகவும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 35,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தங்கம் ஆர்வலர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வாங்க மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தொடர் சரிவில் தூய தங்கத்தின் விலை

தொடர் சரிவில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், தொடர்ச்சியாக எட்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து, 4805 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து, 38,440 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,050 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஏற்றம் கண்ட ஆபரண வெள்ளியின் விலை நிலவரம்

ஏற்றம் கண்ட ஆபரண வெள்ளியின் விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது கடந்த இரு நாட்களாக சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், இன்றும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 72.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 500 ரூபாய் அதிக குறைந்து, 72,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு 56,200 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 80,000 ரூபாயினை தொட்டது. அதனுடன் ஒப்பிடும்போது தங்கம் விலையானது நல்ல சரிவிலேயே காணப்படுகிறது. கிட்டதட்ட 10,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

அமெரிக்க பத்திர லாபத்தின் மதிப்பானது இரண்டு வார உச்சத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. ஏனெனில் பத்திரம் அதிகளவிலான லாபம் ஈட்டும் ஒரு முதலீடாக இருப்பதால், தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

தங்கம் விலை எதிர்பார்ப்பு

தங்கம் விலை எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது 1800 - 1762 டாலர்கள் என்ற நிலையிலேயே காணப்படுகிறது. இதில் இரண்டில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்தாலும், அந்த பக்கம் சற்று தொடர்ந்து செல்லலாம். ஒரு வேளை 1762 டாலர்களை உடைத்தால், 1720 டாலர்களை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தங்கம் விலையானது 1770.65 டாலர்களாக காணப்படுகிறது.

ஜோ பைடன் திட்டம்

ஜோ பைடன் திட்டம்

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வாரத்தில் 1.8 டிரில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தினை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு இன்னும் சற்று வலுவாக காணப்படுகிறது. இதனால் விலை உயர்ந்த ஆபரணங்களாக தங்கம் மற்றும் வெள்ளி, பல்லேடியம் என அனைத்தும் சரிவிலேயே காணப்படுகிறது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரனமாக ஜூன் காலாண்டில் பொருளாதாரம் சற்று சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல கடந்த ஆண்டில் லாக்டவுன் காரணமாக, முடங்கிய தங்கத்தின் தேவையானது மார்ச் காலாண்டில் தான் அதிகரித்துள்ளது. எனினும் தற்போது மீண்டும் அது குறையலாமோ என்ற கவலை எழுந்துள்ளது.

திருமண பருவம் & அக்ஷய திருதியை

திருமண பருவம் & அக்ஷய திருதியை

குறிப்பாக ஜூன் காலாண்டில் திருமண பருவம் மற்றும் அக்ஷய திருதியை என்பதால், தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் வழக்கமான விற்பனை இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுவதால், ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. அதோடு தேவையும் குறையும் என்பதால் இன்னும் சற்று விலை குறைய வாய்ப்புகள் அதிகம். எப்படி இருப்பினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices continually fall for 7th day in a row, down Rs.10,000 from record high

Gold price updates.. Gold prices continually fall for 7th day in a row, down Rs.10,000 from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X