5வது நாளாக பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? தங்கம் வாங்க இது சரியான நேரமா..?

தங்கம் விலையானது குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் ஏற்றம் காணும் என்ற கருத்து முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஏனெனில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து, தொடர்ச்சியாக அந்தளவுக்கு ஏற்றம் கண்டு வந்தது.

ஆனால் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இன்றோடு தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.

அதிலும் கடந்த சில தினங்களாகவே சர்வதேச சந்தையில் தடுமாறி வந்த தங்கம் விலையும், இன்று சரிவினைக் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

இன்று இதெல்லாம் பார்க்கலாம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இனி எப்படி இருக்கும் விலை குறையுமா? அதிகரிக்குமா? வெள்ளி விலை எப்படியுள்ளது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம் என்ன? மீடியம் டெர்மில் எப்படி இருக்கும். நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தடுமாறும் தங்கம் விலை

தடுமாறும் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 11 டாலர்கள் குறைந்து, 1767.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று காலை தொடக்கத்தில் சற்று கீழாக தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க நல்ல வாய்ப்பு தான்.

சூப்பர் சரிவில் வெள்ளி விலை

சூப்பர் சரிவில் வெள்ளி விலை

தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது 1.68% சரிவினைக் கண்டுள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 0.445 டாலர்கள் குறைந்து, 25.965 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது.

செம சரிவில் இந்திய சந்தையில் தங்கம் விலை

செம சரிவில் இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் பலமான சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 363 ரூபாய் குறைந்து, 46,940 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

பலத்த சரிவில் வெள்ளி விலை

பலத்த சரிவில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இன்று பலமான சரிவினைக் கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 1,218 ரூபாய் குறைந்து, 67,758 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் டவுன் ஆகி குறைந்து தான் தொடங்கியுள்ளது. மேலும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு மே காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், ஜூலை காண்டிராக்டில் வாங்கலாம். எனினும் லாபத்தினை பலரும் புராபிட் செய்யலாம் என்பதால், சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு நாட்களாக குறையும் ஆபரண தங்கம் விலை

ஆறு நாட்களாக குறையும் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்றோடு, தொடர்ச்சியாக ஆறாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து 4,438 ரூபாயாகவும், சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 35,504 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஆறு அமர்வுகளாக தொடர்ச்சியாக குறைந்து வரும் தங்கம் விலையானது, வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும் சரிவு

தூய தங்கத்தின் விலையும் சரிவு

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், ஆறாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 4840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 38,720 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி நிலவரம் எப்படி?

ஆபரண வெள்ளி நிலவரம் எப்படி?

வெள்ளியின் விலையானது கடந்த ஆறு அமர்வுகளில், நேற்று மட்டும் சற்று ஏற்றத்தினை கண்டிருந்தது. மற்ற ஐந்து நாட்களும் சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 73.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 500 ரூபாய் குறைந்து, 73,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியினையும் வாங்க இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

பத்திர லாபத்தினை கவனித்து வரும் முதலீட்டாளர்கள்?

பத்திர லாபத்தினை கவனித்து வரும் முதலீட்டாளர்கள்?

அமெரிக்க பத்திர லாபத்தினை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஏனெனில் இதில் ஏதேனும் பெரிய மாற்றம் வந்தால், டாலரின் மதிப்பு அழுத்தம் காணலாம். இதனால் தங்கம் விலையில் அது எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது தடுப்பூசிகளும் போடப்பட்டு வரும் நிலையில் இதுவும் பொருளாதாரத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலருக்கு ஆதரவாக அமையலாம் என முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பத்திர லாபம் சரியும் பட்சத்தில், முதலீட்டாளர்களின் நம்பிக்கை என்பது குறையலாம். இது பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதாரவாக அமையும். அதோடு கோவிட் 2.0 என்பது இப்போதைக்கு முடிவடைவதாகவும் தெரியவில்லை. ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே மூன்றாம் கட்ட பரவலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த கவலைகள் இருந்து வந்தாலும், பத்திர லாபம் என்பது தங்கத்திற்கு எதிராக இருந்து வருகின்றது. ஆக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் இது முதலீடுகளை குறைக்க இது வழிவகுத்துள்ளது. எப்படியிருப்பினும் ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும்போது பத்திர சந்தையின் சிறுமாற்றமும், தங்கத்தில் பெரும் மாற்றத்தினை கொடுக்கலாம்.

இன்று முடியும் ஃபெடரல் வங்கி கூட்டம்

இன்று முடியும் ஃபெடரல் வங்கி கூட்டம்

இன்றுடன் முடியவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்தான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஜோ பைடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், இன்று முதன் முறையாக இந்த கூட்டத்தில் பேச உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக அவர் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

தங்கத்தின் அடுத்த இலக்கு

தங்கத்தின் அடுத்த இலக்கு

மாபெரும் ஊக்கத்தொகை மற்றும் பொருளாதார மீட்டெடுப்பு குறித்தான அறிவிப்புகளை அமெரிக்கா விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் என்பது அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலை கூடலாம் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தங்கம் விலையானது டாலரில் 1900 டாலர்களையும், 10 கிராம் தங்கம் விலையானது 50,000 ரூபாயினை தொடலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுவதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. இதே நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் இன்னும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+