உண்மையில் தங்கம் வாங்குவோருக்கு இது ஜாக்பாட் தான். ஏனெனில் தங்கம் விலையானது புதிய உச்சம் தொடும். அடுத்த ஆண்டின் இறுதிக்குள் 3000 - 5000 டாலர்கள் வரை தொடும் என்றெல்லாம் நிபுணர்கள் கணித்து வந்தனர்.
ஆனால் முதலீட்டாளர்களுகு நல்ல வாய்ப்பளிக்கும் விதமாக தங்கம் விலையானது தொடர்ந்து நான்காவது நாளாக, சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் விலை குறைந்து காணப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று, தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கடந்த சில தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வருகின்றது.
இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
அதெல்லாம் சரி இன்று சர்வதேச தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? என்ன காரணிகள் தங்கத்திற்கு சாதகமாகவும் உள்ளன. நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும் உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.
தங்கம் Vs டாலர்
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு வலுவடைந்து காணப்படும் நிலையில், தங்கம் விலையானது இன்றும் சரிவில் காணப்படுகிறது. அதோடு கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகளும் தங்கத்திற்கு விலை குறைய காரணமாக அமைந்துள்ளன.
சரிவில் தங்கம் விலை
எனினும் தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே அதிக ஏற்றமும் இல்லாமல், சரிவும் காணாமல் வர்த்தகமாகி வருகின்றது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது தங்கம் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும் போது இது மிக நல்ல சரிவிலேயே உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கபப்டுகிறது.
தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணி
நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சரிந்து வரும் நிலையில், இது வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் இல்லாமல் இருந்தாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குழப்பத்தில் முதலீட்டாளர்கள்
எனினும் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும், ஊக்கத் தொகை குறித்தான சரியான அறிவிப்புகள் வெளியாகும் பட்சத்தில் தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும். இதற்கிடையில் சர்வதேச நிபுணர்கள் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில் விலை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கொரோனாவிற்கான மருந்தும் வந்தாயிற்று, இனி தங்கம் விலை எப்படி இருக்கும் என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.
டெக்னிக்கல் பேட்டர் என்ன சொல்கிறது?
ஃபண்டமெண்டல் காரணிகள் குழப்பத்தில் உள்ள அதே நேரத்தில் தங்கத்தின் கேண்டில் ஸ்டிக் பேட்டர்னில், கடந்த சில தினங்களுக்கு முன்பே பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியது. இதனால் தங்கம் விலையானது குறுகிய கால நோக்கில் குறையும் விதமாகமே காணப்படுகிறது.
Comex தங்கம் நிலவரம்
சர்வதேச சந்தையில் நான்காவது நாளாக தங்கம் விலையானது இன்று குறைந்து வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 12.50 டாலர்கள் குறைந்து, 1860.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 1853 டாலர்கள் வரையில் குறைந்து தற்போது சற்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதமான 1848 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், இது இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Comex வெள்ளி நிலவரம்
தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் கிட்டதட்ட 2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் நான்காவது நாளாக தொடர்ச்சியாக சரிந்து வரும் நிலையில், தற்போது 1.80% குறைந்து, 24.012 டாலர்களாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலையிலும் பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
MCX தங்கம் நிலவரம்
MCX தங்கத்தினை பொறுத்தவரையில் ஐந்தாவது நாளாக தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சரிந்து வருகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 270 ரூபாய் குறைந்து, 50,055 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.
MCX வெள்ளி நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கிட்டதட்ட 2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலையும் ஐந்தாவது நாளாக தொடர்ச்சியாக சரிந்து வரும் நிலையில், தற்போது 1113 ரூபாய் குறைந்து, 61,ம்430 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையிலும் பியரிஷ் என் கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஒரு கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 4,747 ரூபாயாகவும், சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 37,976 ரூபாயாகவும் காணப்படுகிறது. உண்மையில் இந்த தங்கம் வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் தூய தங்கத்தின் விலையும் மூன்றாவது நாளாக குறைந்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து 5,185 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 41,480 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியினை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், இன்று கிலோவுக்கு 1600 ரூபாய் குறைந்துள்ளது. இன்று கிராம் வெள்ளியின் விலையானது 1.60 ரூபாய் குறைந்து 66.70 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 66,700 ரூபாயாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications