சாமானியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாகவே பலத்த சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, அவ்வப்போது ஏற்றத்தினைக் கண்டாலும், தொடர்ச்சியாக சரிவினை கண்டு வருகின்றது.

ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும்போது தங்கம் விலையானது பலத்த சரிவிலேயே காணப்படுகிறது. இது இன்னும் செல்லிங் பிரஷரிலேயே காணப்படுவதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்குவதை தவிர்க்கலாம்.

தங்கம் விலை சரிவினைக் காணும்

தங்கம் விலை சரிவினைக் காணும்

தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், இன்னும் செல்லிங் பிரஷரிலேயே இருப்பதால், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். ஏனெனில் அடுத்த 3 - 4 மாதங்களில் தங்கம் விலையானது மீண்டும் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கலாம்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், இன்றோடு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 9.20 டாலர்கள் குறைந்து, 1691.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு இன்று தொடக்கத்தில் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலை சரியும் விதமாகவே காணப்படுகிறது.

Comex வெள்ளி விலை நிலவரம்

Comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் மூன்றாவது நாளாக கிட்டதட்ட 1% சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.68% குறைந்து, 25.285 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 226 ரூபாய் குறைந்து 44,315 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையில் தங்கத்தின் நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது..

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு ( மே காண்டிராக்ட்) 539 ரூபாய் குறைந்து, 65,382 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தை எதிரொலி

சர்வதேச சந்தை எதிரொலி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. குறிப்பாக தங்கம் விலையானது 10 மாத குறைந்த விலையில் காணப்படுகிறது. குறிப்பாக இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலையானது 2% அதிகமாக சரிவினைக் கண்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர லாபம்

தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர லாபம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் 10 வருட பத்திர லாபம், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ச்சியாக வலுவடைந்து வருகிறது. இது எட்டு மாத உச்சத்தினையும் எட்டியுள்ளது. ஆக இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைக்க வழிவகுக்கிறது. இதனால் வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. இது 1760 டாலர்களுக்கு கீழேயே இருப்பதால், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1670 டாலர்களாகும். இதனையடுத்த முக்கிய சப்போர்ட் 1620 டாலர்களாகும். ஒரு சந்தையானது ஏற்றத்திற்கு திரும்பினால் 1820 முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகும். இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 43,880 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 46,450 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Array

Array

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்துடன் ஒப்பிடும்போது 12,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 5,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையானது 10,000 ரூபாய்க்கு மேலும் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணம் கருதி வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக பல திருமணம் மற்றும் சுப காரிய நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. ஆக இந்த நிகழ்வுகள் இந்த ஆண்டில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தங்கம் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தங்கத்தின் தேவையான இந்தியா சீனாவில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகரிக்கும் பணவீக்கம் Vs தங்கம்

அதிகரிக்கும் பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கமானது உள்ளது. இதனால் முதலீட்டாளார்கள் பாதுகாப்பினை காரணம் காட்டி தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் ஆபரண விலை

தங்கம் ஆபரண விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது இன்றும் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 4,181 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 33,448 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றோடு நான்கு தினங்களாகவே சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நான்கு நாட்களில் சவரனுக்கு 1,224 ரூபாய் குறைந்து காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து 4,561 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 36,488 ரூபாயாகவும் விற்பனை, செய்யப்பட்டு வருகிறது. இது இன்றோடு நான்கு நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியினை கண்டு வரும் நிலையில், 4 நாட்களில் 352 ரூபாய் குறைந்து காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இன்று கிராம் வெள்ளியின் விலையானது 0.60 பைசா குறைந்து, 769.80 ரூபாபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 600 ரூபாய் குறைந்து 69,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது இன்றோடு இரண்டு நாட்களில் மட்டும் கிலோவுக்கு 3000 ரூபாய் குறைந்து காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices continue to fall, is it right time to invest in gold?

Gold price update.. gold price continue to fall, is it right time to invest in gold?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X