செம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்றோடு மூன்று வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதிலும் சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு அமர்களாகவே தங்கம் (gold) விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. ஒரு வேளை தங்கம் விலையானது இன்னும் அழுத்தத்தினை காணும்போது, 1660 டாலர்களை உடைத்தால் இன்னும் பலத்த சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய சந்தையில் தங்கம் விலையானது ஒரு வருட குறைந்த விலையினை எட்டியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தையின் அழுத்தம், இன்னும் இந்திய சந்தையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? இந்த இடத்தில் வாங்கலாமா? விற்கலாமா? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1.40 டாலர்கள் குறைந்து, 1684.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்த விலையை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 1673.30 டாலர்கள் என்பது முக்கிய சப்போர்ட் விகிதமாகவும் பார்க்கப்படுகிறது. இதனை உடைத்தால் 1660 டாலர்களை தொடலாம் என்றும், இதனையும் உடைத்தால் தங்கம் விலையானது பலமான சரிவினைக் காணலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.15% குறைந்து, 24.102 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக காலையில் சற்று சரிவில் தான் காணப்பட்டது. தற்போது ஜூன் காண்டிராக்டில், 10 கிராம் தங்கம் விலையானது 26 ரூபாய் குறைந்து, 44,397 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து, 63,113 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் ஆபரண விலை

தங்கம் ஆபரண விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4,174 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 33,392 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றோடு தொடர்ச்சியான மூன்று தினங்களாகவே தங்கம் விலையானது சற்று சரிந்து வருவது சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4,554 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 36,432 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் இன்றோடு மூன்று தினங்களாக சற்று சரிவினை கண்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண் வெள்ளியினை பொறுத்தவரையில், கிராம் வெள்ளியின் விலையானது 1.20 பைசா குறைந்து, 67.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு இன்று 1,200 ரூபாய் குறைந்து 67,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாவே சரிவினைக் கண்டு வருகிறது.

அதிகரிக்கும் பத்திர லாபம்

அதிகரிக்கும் பத்திர லாபம்

அமெரிக்காவின் பத்திர லாபம் 1.776% அதிகரித்து, 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து காணப்படுகிறது. இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க இது வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

தங்கத்தின் லெவல்கள்

தங்கத்தின் லெவல்கள்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது குறையலாம் என்ற விதத்திலேயே காணப்படுகிறது. இது 1700 டாலர்களை உடைக்கும்போது, அடுத்த சப்போர்ட் லெவல் 1680 - 1685 டாலர்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த லெவலில் தான் தங்கம் விலையும் உள்ளது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 50 - SMA என்ற லெவலில் உள்ளது. ஆக அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 44,000 ரூபாய் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

மோதிலாஸ் ஆஸ்வால் பிரைவேட் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், தங்கம் விலையானது 2022ம் நிதியாண்டில் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றும் கணித்துள்ளது. ஏனெனில் இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தினை சிறந்த ஆப்சனாக போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம், தங்கம் விலையானது பெரியளவில் சரியும் என தோன்ற வில்லை. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் பல நாடுகளிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஆக மீண்டும் தங்கம் விலையில் இது எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அதிகரித்து வரும் பத்திர லாபம், டாலரின் மதிப்பு வலுவடைய காரணமாக அமைந்துள்ளது. எனினும் வைரஸ் பரவல் காரணமாக இந்த லாபம் சரியத் தொடங்கலாம் என கூறியுள்ளது.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 56,200 ரூபாய் என்ற உச்சத்தினை தொட்டது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது சுமார் 11,800 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக இந்த விலை சரிவானது நீண்டகால நோக்கில் வாங்க, பலரையும் தூண்டலாம்.இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. கேண்டில் பேட்டர்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, 11,800 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் வாங்குபவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices continue to falling today, is it right time to invest in yellow metal?

Gold price update.. gold prices continue to falling today, is it right time to invest in yellow metal?
Story first published: Wednesday, March 31, 2021, 14:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X